90 காலகட்டங்களில் அதிக ஹிட் படங்களை கொடுத்து ரஜினி, கமலுக்கு நிகராக வந்தவர் விஜயகாந்த். குறிப்பாக இவர் தேர்ந்தெடுத்த நடிக்கும் கிராமத்து மற்றும் ஆக்ஷன் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது இதனால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் அனைத்து இடங்களிலும் உருவாக்க தொடங்கினார்.
தொடர்ந்து சினிமாவில் சிறப்பாக நடித்ததோடு மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் வாரி வழங்கும் வள்ளல் உதவி என்று வந்தவர்களுக்கு தன்னால் முடிந்த எதையாவது கொடுத்து உதவுவதை வழக்கமாக வைத்திருப்பார். இப்பொழுது விஜயகாந்த் பெருமளவு படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அரசியல் ஜெயித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் விஜயகாந்த் பற்றி ஒரு சூப்பரான செய்தியை தயாரிப்பாளர் காஜா மைதீன் சமூகத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அதில் அவர் சொன்னது வாஞ்சிநாதன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது அப்பொழுது தான் சினிமா பிரபலங்கள் ஓய்வெடுப்பதற்காக கேரவன் அறிமுகப்படுத்தப்பட்டது அப்பொழுது நான் விஜயகாந்த் சாரை மகிழ்விக்க அவரை கேட்காமலேயே ஒரு காரியம் செய்தேன்.
அதாவது ஒரு கேரவன் வாடகைக்கு எடுத்து ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறுத்திவிட்டேன் ஷூட்டிங் இடைவெளியில் விஜயகாந்த் சாரிடம் சென்று கேப்டன் அங்க கேரவன் இருக்கு ரெஸ்ட் எடுங்க என கூறினேன் அவர் கோபமாகிவிட்டார். உடனே ஷூட்டிங் கேன்சல் செய்து விடு எனக் உதவியாளரிடம் கூறி உள்ளார் தயாரிப்பாளர் ஏன் என்று கேட்டார் அதற்கு கேரவன் இங்கே இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என கூறி உள்ளார்.
உடனே கேரவேன் அங்கு இருந்து அகற்றப்பட்டது சினிமா உலகில் தற்போது கேரவன் இருந்தால் தான் படத்திலேயே நடிப்பேன் என நடிகர், நடிகைகள் கூறி வருகின்றனர். ஆனால் முதலிலேயே வேண்டாம் என தடுத்து நிறுத்தியவர் விஜயகாந்த் சினிமா உலகில் நாம் நடிக்க வந்திருக்கும் அதற்கான வேலையை பார்த்துவிட்டு போம் இதற்கிடையில் ஏன் கேரவன் என்ற பெயரில் ரெஸ்ட் எடுக்கிறார்கள் என்பதை அப்பொழுது உணர்ந்து அதை வேண்டாம் என நிராகரித்தார்.