போலீசாக வேஷமிட்டு நடித்ததற்கு வெட்கப்படுகிறேன் தலை குனிகிறேன், தலை குனிகிறேன்.. ஆவேசமாக பேசிய விஜயகாந்த்.! வைரலாகும் வீடியோ

vijayakanth
vijayakanth

நடிகர் விஜயகாந்த் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் இவர் நடிக்கின்ற காலத்தில் ரஜினி கமலுக்கே டப் கொடுத்தவர், அதேபோல் பல ரசிகர்கள் மற்றும் மக்கள் விஜயகாந்த் திரைப்படம் என்றாலே விரும்பி பார்ப்பார்கள்.

அந்த வகையில் பல விஜயகாந்த் திரைப்படங்கள் மெகா ஹிட்டாகி உள்ளன, அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த் பல திரைப்படங்களில் போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளார், போலீஸ் உடையில் விஜயகாந்த் பேசும் ஒவ்வொரு வசனமும் திரையரங்கமே அதிரும் அந்த அளவு ரசிகர்கள் கைதட்டி விசில் அடிப்பார்கள்.

நடிகர் விஜயகாந்த் ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார், அதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். நடிகர் விஜயகாந்த் நடிக்கும் பொழுது ஒரே வருடத்தில் 18 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தவர்.

இந்த நிலையில் தற்போது சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்திற்கு உலகம் முழுவதும் பல பிரபலங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள், இந்த நிலையில் விஜயகாந்த் சில வருடங்களுக்கு முன்பு மேடையில் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது நான் போலீசாக நடித்ததற்கு வெட்கப்படுகிறேன் தலை குனிகிறேன் தலை குனிகிறேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் படம் வேகமாக வைரலாகி வருகிறது.