தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விஜயகாந்த் இவர் தற்பொழுது தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் தலைவர் ஆவார். 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர்.இந்த நிலையில் விஜயகாந்த் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகில் உள்ள ராமநாதபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
ஆனால் சிறுவயதிலேயே இவரின் குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது அதனால் விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார். சிறு வயதிலேயே சினிமாவில் அதிக ஆர்வம் இருந்ததால் படிப்பில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிவந்த அரிசி ஆலையில் விஜயகாந்த் சிறுசிறு பணிகளை செய்து வந்தார்.
இன்று 1879ஆம் ஆண்டு அகல்விளக்கு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து இனிக்கும் இளமை, நீரோட்டம், சட்டம் ஒரு இருட்டறை, சிவப்பு மல்லி ,நெஞ்சில் துணிவிருந்தால், வீரபாண்டியன், கூலிக்காரன் செந்தூரப்பூவே, பெரியண்ணா, கருப்பு நிலா, பெரியமருது, சேதுபதி ஐபிஎஸ், என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள விஜயகாந்த் 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். விஜயகாந்த் 1993 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாக போட்டியிட்டார் அதுமட்டுமில்லாமல் அவர்களில் பலர் வெற்றியும் பெற்றார்கள்.
அதனால் விஜயகாந்த் அவர்கள் அரசியலில் ஈடுபட எண்ணம் கொண்டார். அரசியலில் அதிக கவனம் செலுத்தியதால் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் அதன்பிறகு உடல்நிலை சரியில்லாததால் சினிமாவில் நடிப்பதையே முற்றிலுமாக தவிர்த்து வந்தார்.
விஜயகாந்த் மற்றும் பிரேமலதா இவர்களுக்கு இரண்டு மகன்களில் ஒரு மகன் விஜய பிரபாகரன் இவர் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள் இந்த நிலையில் விஜய பிரபாகரன் மற்றும் அவரது மனைவி இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.