படு ஸ்லிம்மாக செம ஸ்டைலாக மாறிய கேப்டன் மகன்.! ஒருவேளை அடுத்த படத்துக்கு ரெடியாகி விட்டாரோ

vijayakanth

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த் இவர் முதன்முதலில் 1979ஆம் ஆண்டு அகல்விளக்கு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இனிக்கும் இளமை, நீரோட்டம், சாமந்திப்பூ என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இவர் இதுவரை 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படிப் பல திரைப்படங்களில் கொடிகட்டி பறந்து வந்த விஜயகாந்த் 1993 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுழற்சியாக போட்டியிட்டார்கள் அவர்களில் பலரும் வெற்றி பெற்றார்கள். இதனைப் பின்புலமாக வைத்து விஜயகாந்த் அரசியலில் ஈடுபட்டார் அதன் பிரதிபலனாக 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார் இவர் கட்சி நிறுவனர் தலைவராக பொறுப்பேற்றார்.

அதேபோல் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன் கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார் 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றினார். இந்த தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சி சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தார்கள் அதன்பிறகு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அதனால் விஜயகாந்த் அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமை கிடைத்தது.

மேலும் தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் 2016ஆம் ஆண்டு இருந்தார். கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சண்முக பாண்டியன் என்ற மகன் இருக்கிறார் இவர் தமிழில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் 2015ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிய சகாப்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை இயக்குனர் சுரேந்திரன் தான் இயக்கியிருந்தார்.

vijayaprabhaharan
vijayaprabhaharan

சமூகம் பாண்டியன் தமிழில் நடித்த முதல் திரைப்படமாகும் அதேபோல் விஜயகாந்தின் மற்றொரு மகன் விஜய பிரபாகரன். இவர் தந்தையைப் போல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் இவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் அந்தக் கட்சியை வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தே.மு.தி.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 60 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க 2 லட்சத்து 156 வாக்குகள் மட்டுமே பெற்றது அதனால் படுதோல்வியை சந்தித்தது.

விஜயபிரபாகரன் தேர்தலின் பொழுது வெள்ளை சட்டை அணிந்து கொண்டு பக்கா அரசியல்வாதியாக இருந்தார் ஆனால் தற்போது தேர்தல் முடிந்து விட்டதால் படு ஸ்டைலாக வேற லெவலுக்கு மாறியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

vijayaprabhaharan