தமிழ்சினிமாவில் ரஜினி, கமலுக்கு இணையாக மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் நடிகர் விஜயகாந்த், ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த் திரைப்படம் வெளியாகிறது என்றால் ஒட்டுமொத்த ரசிகர்களும் குஷி ஆகி விடுவார்கள். அந்த அளவு விஜயகாந்த் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை.
மேலும் விஜயகாந்த் திரைப்படம் நீண்ட நாட்களாக திரையரங்கில் ஓடும், இவர் ஒரு காலகட்டத்தில் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து முழுநேர அரசியலில் இறங்கினார், அரசியலில் மக்களுக்கு பிடித்த தலைவனாக மாறினார்.
இந்தநிலையில் இவருடைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் கால்தடம் பதித்தார். ஆனால் விஜயகாந்த் அளவிற்கு சண்முக பாண்டியனால் பெரிய நடிகராக உயர முடியவில்லை, அதனால் சிறிது காலம் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் உடல் எடை அதிகரித்து அதிக எடையுடன் காணப்பட்டார், ஆனால் தற்போது மீண்டும் படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.
தற்பொழுது விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் புதிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.