விஜயகாந்த் வீட்டுக்கு வரணும்.. நலமுடன் இருந்தால் தோப்புக்கரணம் போடுறேன்.. கடவுளிடம் பிரார்த்தனை செய்த சிறுமி

Vijayakanth
Vijayakanth

Vijayakanth : மக்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் நாயகன் கேப்டன் விஜயகாந்த் இவர் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் அதன் பிறகு அரசியலில் என்ட்ரி கொடுத்தார். எம்எல்ஏவாக முதலில் அரியணை ஏறினார் அதன் பிறகு எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார்.

தொடர்ந்து வெற்றி கண்டு வந்த விஜயகாந்துக்கு உடல்நல குறைவு காரணமாக ஓய்வெடுத்து வந்த நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி உடல் நலம் ரொம்ப மோசமானதால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது அவர் இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டுமென மருத்துவமனை சார்பில் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டது.

ஸ்ருதி முன்னாடி மீனாவை ஒரு வேலைக்காரி போல வேலை வாங்கும் விஜயா.. யோவ் இயக்குனர் இதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கு கொந்தளிக்கும் ரசிகர்கள்

விஜயகாந்துக்கு தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்பத்தாரின் கண்காணிப்பில் இருந்து வருகிறார் இவருடைய உடல்நல குறைவு செய்தியை கேட்டு பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர் அண்மையில் குவைத்திலிருந்து  தொண்டர் ஒருவர் வீடியோ மூலம் பேசியது என்னவென்றால் விஜயகாந்தின் உடல்நலம் சரியில்லாததை கேட்டு நான் ரொம்ப அழுது கொண்டிருக்கிறேன்.

அவருக்கு எதுவும் ஆகக்கூடாது. விஜயகாந்துக்கு ஏதாவது உறுப்புகள் வேண்டும் என்றால் என்னுடைய கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்து உறுப்புகளையும் தருகிறேன் விஜயகாந்த் காக இதை நான் மனப்பூர்வமாக செய்கிறேன் என கூறினார். இந்த நிலையில் சிறுமி ஒருவர் பிரார்த்தனை செய்த வீடியோ இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலர் நகர் பகுதியில் சேர்ந்த சிறுமி ஒருவர் தன்னுடைய வீட்டில் விநாயகர் முன்பு நின்று கைகளை கூப்பி விஜயகாந்த் கேப்டன் சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும் அவர் உடல் நலமுடன் வந்தால் உனக்கு பத்து தோப்பு காரணம் போடுகிறேன் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்திருக்கிறார்.

பொம்மலாட்டமாக மாறிய பிக்பாஸ் வீடு.. சீக்ரெட் பொம்மையான விசித்ரா.. வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

சிறுமியின் பிரார்த்தனை பலிக்க வேண்டும் என விஜயகாந்தின் தொண்டர்களும், ரசிகர்களும் கூறி வருகின்றனர் அந்த வீடியோ பொதுமக்கள் மத்தியிலும் வைரல் ஆகி வருகிறது அவர்களும் கேப்டன் விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகின்றனர்