வில்லனாக நடிக்க மறுத்த விஜயகாந்த்.! அதன் பிறகு விஷ்பரூபம் எடுத்த காரணம் என்ன தெரியுமா.?

vijayakanth
vijayakanth

தமிழ் சினிமாவில் கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் இவர் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், அரசியல்வாதி என அனைத்து துறைகளிலும்  ஈடுபாடு கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் விஜயகாந்த்.

மேலும் நடிகர் விஜயகாந்தின் நூறாவது திரைப்படம் கேப்டன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆனால் இது போன்ற நூறாவது திரைப்படம் ரஜினி, கமல் இவர்களுக்கு கூட அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜயின் தந்தையான எஸ் ஜே சி அவர்களின் திரைப்படமான சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்று தான் சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் 100 நாட்களுக்கு மேலோடி ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்து கொடுத்தது.

அதன் பிறகு தொடர் தோல்வியினால் நடிகர் விஜயகாந்த் அவர்கள் சினிமாவை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்த சமயத்தில்தான் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று அந்த படத்தை மறுத்துவிட்டாராம்.

அதன் பிறகு மீண்டும் எஸ் ஜே சி அவர்களுடன் இணைந்துள்ளார் அந்த திரைப்படம் தான் சாட்சி இந்த திரைப்படம் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு மீண்டும் ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது அதன் பிறகு அவருடைய திரைப்படங்கள் எல்லாமே வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு முன்னாடி தொடர் தோல்வியினால் அவமானப்பட்ட நடிகர் விஜயகாந்த் இந்த திரைப்படத்தின் மூலம் அவருடைய வாழ்க்கையை மாறியது என்று தான் சொல்ல வேண்டும்.

நடிகர் விஜயகாந்த் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில ஆண்டுகளாக நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகுதான் அரசியலில் புகுந்தார் அப்போதும் கூட நடிகர் விஜயகாந்த் இருந்தால் ஏதேனும் ஒரு பதிவில் தான் இருக்க வேண்டும் இரண்டு பதிவில் இருந்தால் குழப்பம் வந்துவிடும் என்று கூறி நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜனாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.