நடிகர் அஜித் எப்போதும் சினிமாவில் மற்ற கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் மதிக்கும் ஒரு நடிகராக இருக்கிறார். ஏனென்றால் இவர் எந்த ஒரு தீங்கான விஷயத்திலும் ஈடுபட மாட்டார் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார். இவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து தனக்கு பிடித்த சில விஷயங்களிலும் ஈடுபட்டு வருகிறார்..
மற்றும் குடும்பத்தையும் சிறப்பாக கவனித்து வருகிறார் அது ரசிகர்களுக்கு மிகவும் இன்ஸ்பயரிங் ஆக இருந்து வருகிறது. அஜித்தை ரோல் மாடலாக கொண்டு பல இளம் நடிகர்கள் மற்றும் ரசிகர்களும் பின் தொடர்கின்றனர். தற்போது அஜித் தனது 61வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்த தனது 62வது திரைப்படத்தில் நடிக்கவும் விக்னேஷ் சிவனுடன் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் அஜித் அவர் குறித்து எந்த தகவலையும் சோசியல் மீடியாவில் வெளியிடவில்லை என்றாலும் தினம் ஒரு தகவல் அஜித் குறித்து மற்ற பிரபலங்கள் மூலம் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
அப்படி சில ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் விஜயகாந்த் அஜித்தை பாராட்டி பேசி இருக்கிறார் அது ஏன் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு தமிழ் நடிகர்கள் பலரும் ஒன்றுகூடி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். அப்போது கேப்டன் விஜயகாந்த் அஜித் இடம் ரொம்ப நேரம் உரையாடலில் இருந்தாராம்.
அது பெரிய விஷயமாக பேசப்பட்டது. கேப்டன் விஜயகாந்த் அஜித்திடம் அப்போது என்ன பேசினார் என்றால் அஜித் நடித்த பில்லா படம் குறித்து பாராட்டினாராம். மேலும் இந்த ட்ரெண்டு கேத்த சரியான படங்களை தேர்வு செய்து நடித்து சக்சஸ் செய்கிறீர்கள் என கேப்டன் விஜயகாந்த் அஜித் குறித்து புகழ்ந்து பேசினாராம்.