Vijayakanth : தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வெற்றி கண்டவர் ஆர் சுந்தர்ராஜன் இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் அண்ணாமலை என்ற கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் மேலும் பிரபலமடைந்து வருகிறார் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிக்காக எழுதிய விஜயகாந்த் நடித்தது குறித்து விலாவாரியாக பேசிய உள்ளார்.
ஆர் சுந்தர்ராஜன் விஜயகாந்த் வைத்து வைதேகி காத்திருந்தாள் என்னும் படத்தை இயக்கினார் இந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து சுந்தர்ராஜன் அடுத்தடுத்த படங்களை இயக்க ஆரம்பித்தார் அப்படி அம்மன் கோயில் கிழக்காலே படத்தை கதையை எழுதினார்.
எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு விஜயகாந்துக்கு மட்டுமே நடந்த அதிசயம்.. சோகத்தில் மற்ற நடிகர்கள்
இந்த படத்தின் கதையை எழுதும் போதே ஹீரோவாக ரஜினியை நடிக்க வைக்கவும், ஹீரோயினாக ராதாவையும் நடிக்க வைக்க முடிவு செய்துவிட்டார். முழு கதையும் எழுதிவிட்டு ரஜினியை சந்திக்க பார்த்தார் ஆனால் அது கடைசிவரை முடியவில்லை வேறு வழி இல்லாமல் முரளியிடம் சொல்ல பார்த்தார்.
ஆனால் முரளி பூவிலங்கு படம் ஹிட்டானதால் கன்னடத்தில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது இதனால் முரளி அப்பா கன்னடத்தில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார் அதை முடித்துவிட்டு தான் தமிழுக்கு திரும்புவார் எனக் கூற சுந்தர்ராஜன் இந்த படத்தை சீக்கிரம் எடுத்தாக வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கும் போது நாம் விஜயகாந்தை வைத்து எடுத்த வைதேகி காத்திருந்தால் ஹிட் அடித்து விட்டது.
அறிமுகமான காலத்திலேயே அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்களை கொடுத்த நடிகர்கள்..
மீண்டும் விஜயகாந்த்திடம் இந்த கதையை சொல்லி பார்க்கலாம் என போய் சொன்னாராம் விஜயகாந்துக்கு ரொம்ப பிடித்துப் போகவே அம்மன் கோயில் கிழக்காலே கதையில் ஒப்புக்கொண்டாராம்.. ரஜினிக்கு பதிலாக விஜயகாந்த் நடிக்க வைத்தார் ஹீரோயின் அவர் நினைத்தது போல ராதா நடித்தார். மேலும் ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா, செந்தில், ராதாரவி, வினு சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் மொத்தம் 8 பாட்டுகள் 8 பாடலுமே ஹிட் அடித்தது. படத்தில் இடம்பெற்றுள்ள ரொமான்ஸ் காட்சிகள், காமெடி காட்சிகள், உருக்கமான சென்டிமென்ட் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து பெரிய ஹிட் அடித்தது இந்த படத்திற்கு பிறகு விஜயகாந்த் பெரும் புகழும் கிடைத்தது மேலும் வாய்ப்புகளும் அடுத்தடுத்து குவிந்தன.
சில நாட்களுக்கு பின் ரஜினியை சந்தித்த சுந்தர்ராஜன் அம்மன் கோயில் கிழக்காலே படத்தின் கதையை உங்களுக்காக தான் எழுதினேன் ஆனால் அப்பொழுது சந்திக்க முடியவில்லை விஜயகாந்த் வைத்து எடுத்தேன் என கூற ரஜினியால் இது நம்பவே முடியவில்லையாம் என்னிடம் ஒரு போன் போட்டு சொல்லி இருந்தால் நான் ஒப்புக்கொண்டு இருப்பேன் என கூறினாராம். அதன் பிறகு ரஜினியும், சுந்தர்ராஜன் இணைந்து ராஜாதி ராஜா என்ற படத்தில் இணைந்தனர். படம் சூப்பர் ஹிட் அடித்தது.