விஜயகாந்த் இறப்பிற்கு காரணம் இதுதானா… வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..

vijayakanth passed away reason
vijayakanth passed away reason

vijayakanth passed away reason : இந்த வருடத்தின் இறுதியில் மக்களுக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது அதுதான் விஜயகாந்தின் இறப்பு செய்தி விஜயகாந்தை கேப்டன், கருப்புத் தங்கம், கருப்பு எம்ஜிஆர் என பலரும் அன்போடு அழைக்கப்பட்டு மக்கள் மனதில் கொடை வள்ளலாக வாழ்ந்தவர். ஆனால் இன்று விஜயகாந்த் மக்கள் மனதில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார் திடீரென இறந்து விட்டார்.

இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த் சில வாரங்களுக்கு முன்பு சலி, காய்ச்சல், தொந்தரவு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு நுரையீரல் அலர்ஜி இருந்ததால் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

வசதியான குடும்பத்தில் பிறந்து பல கஷ்டங்களை அனுபவித்த விஜயகாந்த்.. துணிச்சலாக செயல்பட்டு மக்கள் மனதை கவர்ந்த கேப்டன்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய விஜயகாந்த் திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக வெண்டியிலேட்டர் சிகிச்சையும் கொடுக்கப்பட்டது ஆனால் திடீரென அவருக்கு சிகிச்சை பலனின்றி மூச்சு திணறி இருந்துள்ளார்.

விஜயகாந்தை காப்பாற்ற எவ்வளவு முயற்சி செய்தும் மருத்துவர்கள் ஏமாற்றம்தான் அடைந்தார்கள் அவருடைய உடல் ஆம்புலன்ஸில் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது அது மட்டும் இல்லாமல் தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்கப்பட்டு வருகிறது. கேப்டன் உடலை கடைசியாக ஒரு முறை பார்த்து விட வேண்டும் என பல்லாயிரம் கணக்கான ரசிகர்கள் கண்ணீருடன் அவர் வீட்டின் முன்பு திரண்டு உள்ளார்கள்.

கேப்டன் உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.. கதறியழும் பிரேமலதா.. குவிந்த தொண்டர்கள்

விஜயகாந்த் மறைந்து விட்டதால் திரையரங்கில் அனைத்து காலை காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது இன்னும் சிறிது நேரத்தில் கேப்டனின் உடல் தேமுதிக அலுவலகத்திற்கு பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட இருக்கிறது அதனைத் தொடர்ந்து அவருடைய இறுதி சடங்கு விஜயகாந்த் ஸ்ரீ ஆண்டவர் அழகர் கல்லூரியில் நடைபெறும் எனவும் தகவல் கிடைத்துள்ளது..