Vijayakanth : கேப்டன், கருப்பு எம்.ஜி.ஆர் என செல்லமாக அழைக்கப்பட்டவர் விஜயகாந்த் இவர் திரையுலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து பேரையும், புகழையும் சம்பாதித்தார். தான் மட்டும் சினிமாவில் வளராமல் தான் கூட இருந்த நண்பர்கள், திறமையான பல கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தார்.
திரை உலகில் வெற்றி கண்டு வந்த இவர் விருதகிரி படத்திற்கு பிறகு அரசியலில் என்ட்ரி கொடுத்து மாஸ் காட்டினார். ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக வந்த இவர் அடுத்த சிஎம் ஆகலாம் என பேசப்பட்டது ஆனால் திடீரென உடல் ஒத்துழைக்காததால் ஓய்வு எடுத்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கூட மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.
இந்த நிலையில் விஜயகாந்த் போண்டாமணிக்கு செய்த உதவி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. போண்டாமணி 12 லட்சம் கடனில் இருந்த பொழுது யாருமே அவருக்கு உதவி செய்யவில்லை இதை தெரிந்து கொண்ட விஜயகாந்த் அவரது 12 லட்சம் கடனை தானாக முன்வந்து அடைத்துள்ளார். ஒரு தடவை விஜயகாந்தை சந்திக்க அவரது கட்சி தொண்டர்களுடன் போண்டாமணி வந்திருக்கிறார்.
இதில் போண்டாமணி வந்ததை விஜயகாந்த்திடம் சொல்லி உள்ளார்கள் உடனே விஜயகாந்த் போண்டாமணியை மட்டும் வர சொல்லுங்கள் கூறி இருக்கிறாராம் காரணம் கட்சி தொண்டர்கள் தன் கட்சி ஆரம்பித்த பிறகு தான் வந்தார்கள் ஆனால் நாம் கலைஞர்கள் காலம் காலமாக சினிமாவில் பணியாற்றி வருகிறோம் கூறி போண்டாமணியை அழைத்து பேசியிருக்கிறார்.
கேப்டனை தாக்கிய கொரோனா.. மருத்துவமனையில் அனுமதி இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
பிறகு 5000 ரூபாய் செக் ஒன்றை கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்து அழகு பார்த்தார் விஜயகாந்த். போண்டாமணியின் இறப்பு செய்தி கூட விஜயகாந்துக்கு ரொம்ப கஷ்டத்தை ஏற்படுத்தியது விஜயகாந்த் புரொடக்ஷனில் ஒரு சில படங்களில் போண்டாமணி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.