விஜயகாந்த் வேண்டா வெறுப்பாக நடித்த திரைப்படம்.. வெளிவந்து என்ன ஆனது தெரியுமா.?

vijayakanth
vijayakanth

80,  90 கால கட்டங்களில் பல ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் வெற்றி நடிகராக ஓடியவர் கேப்டன் விஜயகாந்த். இப்பொழுது இவர் படங்களில் நடிக்காமல் அரசியல் பிரவேசம் கண்டு வெற்றி நடை கண்டு வருகிறார். இப்படி இருந்தாலும் கடந்த சமீபகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார் விஜயகாந்த்.

இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் பற்றிய ஒரு செய்தியை இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதாவது.. விஜயகாந்த் ஆரம்பகால கட்டத்தில் இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்த படங்களில் தான் அதிகம் நடித்திருந்தார்.  அந்த சமயத்தில் இப்ராகிம் ராவுத்தர் ஒரு கதை எழுதி இருந்தார் இது விஜயகாந்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லை..

ஆனால் ராவுத்தர் அந்த கதையை படமாக எடுக்க முடிவு செய்து ஒரு புதுமுக இயக்குனரை அழைத்து இந்த படத்தை எடுக்க சொன்னார் ஆனால் விஜயகாந்துக்கு தயக்கமாக இருந்தது ஆனால் தனது நீண்ட நாள் நண்பர் என்ற காரணத்தினால் அந்த படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார். அப்படி 1990 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் தான் புலன் விசாரணை.. இந்த படத்தை ஆர் கே செல்வமணி இயக்கியிருந்தார்.

படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து ஆனந்த்ராஜ், சரத்குமார், ரூபினி, ராதாரவி,  செந்தில் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் விஜயகாந்த் இருந்தது ஆனால் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இது விஜயகாந்துக்கு ஷாக் கொடுத்தது.

புலன் விசாரணை படத்தை இயக்கி விஜயகாந்த் மனதில் இடம் பிடித்தார் ஆர்கே செல்வமணி அதன்பிறகு ஆர் கே செல்வமணி, விஜயகாந்தை வைத்து கேப்டன் பிரபாகரன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் தற்பொழுது காட்டுத் தீவு போல பரவி வருகிறது.