விஜயகாந்த் மதுரை மாவட்டம் விருதுநகரில் பிறந்தவர் இவரின் பெயர் விஜயராஜ் சினிமாவிற்காக விஜயகாந்த் என பெயரை மாற்றிக் கொண்டார் தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புறமும் இல்லாமல் சிபாரிசு இல்லாமல் நடிக்க வந்தவர் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடி எடுத்து வைத்து விண்ணை எட்டும் உயரத்திற்கு வளர்ந்தவர். தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தேமுதிக என்று ஒரு கட்சியை ஆரம்பித்து அதில் தலைவரானார் அதன் பிறகு 71 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 28ஆம் தேதி மறைந்தார் இவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் தீவு திடலில் வைக்கப்பட்டிருந்தது அரசியல் கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் என அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
பிறகு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது தமிழ் சினிமாவில் திறமையான நடிகராக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த் இவர் மிகச்சிறந்த மனிதர் இல்லாதவர்களுக்கு வாரி வாரி வழங்கும் கொடை வள்ளல், அடுத்த எம்ஜிஆர், கருப்பு எம்ஜிஆர் என பலரும் கூறி வந்தார்கள் நியாயமாக நடந்து கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார்.
மேலும் பெரிய நடிகர் சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பார்க்காமல் அனைவரது நிறைகுறைகளை தெரிந்து கொண்ட உதவி செய்து வந்தவர் அது மட்டும் இல்லாமல் இவரால் பலர் பலன் பெற்றுள்ளார்கள் அதனை பலரும் பேட்டியில் கூறியுள்ளதை நாம் கேட்டுள்ளோம். பல்வேறு சுவாரசியமான தகவலை தெரிவித்து வருகிறார்கள் அந்த வகையில் தனக்கு இக்கட்டான சூழ்நிலையில் கை கொடுத்தார் என்று சந்திரசேகர் பகிர்ந்துள்ளார்.
அதாவது சட்டம் ஒரு இருட்டறை படம் குறித்து அவரிடம் பேசியுள்ளார் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் கதையை முதன்முதலில் பிரபுவிடம் கூறினேன் ஆனால் அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை அதன் பிறகு பெங்களூரில் இருந்து ஒருவரை வரவழைத்து மூன்று முறை டெஸ்ட் சூட் எடுத்து பார்த்தோம் ஆனால் அது அனைத்தும் அந்த கதைக்கு செட்டாகவில்லை அதன் பிறகு நடிகர் விஜயகாந்த் கை கொடுத்தார் படத்தில் ஒப்பந்தமானார் என்று எஸ் ஏ சந்திரசேகர் ஓபன் ஆக தெரிவித்துள்ளார்.