Vijayakanth : திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகன் கேப்டன் விஜயகாந்த். ஆரம்பத்தில் கிராமத்து கதை அம்சம் உள்ள சப்ஜெக்ட்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜயகாந்த் காலப்போக்கில் அனைத்து விதமான இதமான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை அள்ளினார் ரஜினி கமலுக்கு அடுத்த மூன்றாவது இடத்தை விஜயகாந்த் தக்க வைத்துக் கொண்டார். மேலும் சிறப்பாக வளம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விருதகிரி படத்திற்கு பிறகு முழு அரசியல் பிரவேசம் கண்டார்.
முதலில் எம்எல்ஏவாக அரியணை ஏறிய விஜயகாந்த் அடுத்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார் அடுத்த சிஎம் ஆக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது திடீரென உடல் ஒத்துழைக்காததால் அனைத்திலிருந்தும் விலகி ஓய்வு எடுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் இவருடைய இறப்பு செய்தியை கேட்டு அரசியல்வாதிகள் தொண்டர் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் மக்கள் என அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
வர முடியாதவர்கள் சமூக வலைதள பக்கங்களில் விஜயகாந்த் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அனுதாபங்களை தெரிவித்து வந்தனர். விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு அவரைப் பற்றிய பேச்சுக்கள் அதிகமாக இருந்து வருகிறது இந்த இலையில் பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் வடிவேலு,விஜயகாந்த் குறித்து பேசி உள்ளார்.. விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பின்னர் வடிவேலு பழசை எல்லாம் மறந்து திமுகவுக்காக விஜயகாந்தை திட்டி தீர்த்து இருக்கிறார்.
வடிவேலுவும்,விஜயகாந்த்ம் சொந்த ஊர் மதுரை தான் அதனால் சென்னையில் இருந்து அடிக்கடி மதுரைக்கு விமானத்தின் மூலம் போவது வழக்கம் பலமுறை அப்படி சந்தித்திருக்கிறார்கள். ஆனால் விஜயகாந்த் திட்டியதற்கு பிறகு ஒருவேளை விஜயகாந்த் நேரில் பார்த்தால் என்ன செய்வது என யோசிக்க உடனே வடிவேலு ஆட்கள் அண்ணன் கருப்பு கலர் கூலிங் கிளாஸ் போட்டுக்குங்க பாத்தும் பாக்காத மாதிரி போயிடலாம் என ஐடியா கொடுத்துள்ளனர்.
உடனே வடிவேலுவும் அதை பாலோ செய்ய ஆரம்பித்தார் 2011 சட்டசபை தேர்தலில் விஜயகாந்த்தை வடிவேலு திட்டி தீர்த்தார் 2012 ஆம் ஆண்டு எதிர்ச்சியாக ஒரு நாள் விமான நிலையத்தில் நேருக்கு நேர் பார்த்து உள்ளனர் வடிவேலு வழக்கம் போல கண்டும் காணாதது போல் போய்விடலாம் எனப் போக விஜயகாந்த் வடிவேலு எப்படி இருக்க என கேட்டு இருக்கிறார்.
வடிவேலுக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை தூக்கி வாரி போட்டு விட்டதாம் வேறு வழி இல்லாமல் கேப்டன் நல்லா இருக்கேன் என கும்பிடு போட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம். விஜயகாந்த் பக்கத்தில் இருந்தவர்கள் ஏன் அவர்கிட்ட பேசினீங்க என கேட்க.. தெரியாம பேசி இருப்பான் விடு அவன் போயிட்டு போறான் என சிரித்துக் கொண்டே சொன்னாராம்.