பார்த்த உடனேயே அஜித்தை பற்றி புட்டு புட்டு வைத்த விஜயகாந்த்..! சொன்னது அனைத்தும் இப்ப நடக்குது.! இயக்குனர் பேட்டி.

ajith-
ajith-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார் இவர் அண்மைக்கலமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமான வசூலை அள்ளுகின்றன. இதனால் அஜித்தின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்பொழுது கூட தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருட்கள் போனி கபூர் தயாரிக்கிறார்.

ஹச். வினோத் இயக்குகிறார் இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாக்கி வருகிறது இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, அஜய், மகாநதி சங்கர், யோகி பாபு மற்றும் பாலிவுட் பிரபலமான சஞ்சய் தத்துவம் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏகே 61 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் எடுக்கப்பட்டு வந்தது தற்போது புனேவை நோக்கி படக்குழு நகர உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. நடிகர் அஜித் அனைத்து வேலைகளையும் தற்போது வெற்றிகரமாக முடித்ததை அடுத்து படப்பிடிப்பு கலந்து கொள்வார் என தெரிய வருகிறது.

இந்த படம் அஜித்திற்கு மிகப்பெரிய ஒரு படமாக உருவாகி வருவதாக படத்தில் பணியாற்றியவர்களும் மற்றும் பார்த்தவர்களும் சொல்லி வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் அஜித்குமார் பற்றிய செய்தி ஒன்று இணையதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் நடிப்பை ஆரம்ப காலத்தில் இருந்து பார்த்து வருபவர் கேப்டன் விஜயகாந்த் இவர் ஒரு தடவை நடிகர் அஜித் பற்றி ராசி பட இயக்குனர் அப்பாஸிடம் பேசி உள்ளார்.

அதில் அவர் சொன்னது அஜித்தை பார்த்து விஜயகாந்த் அவருக்கு வில்லன் முகம் கண்டிப்பாக இவன் வில்லனாக நடித்தால் மிகப்பெரிய ஒரு பெயர் பெறுவான் என்று கூறினார் இதனை கேட்ட இயக்குனர் ஷாக் ஆகி சார் என் படத்தின் ஹீரோ இப்படி சொல்லிட்டீங்களே என்று கேட்டுள்ளார் ஆனால் சொல்லி வைத்தது போல  அஜித் வில்லனாக  நடித்த ஒவ்வொரு படமும் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக மாறியது. அப்பொழுது விஜயகாந்த் சொன்னது உண்மைதான் என முரளி அப்பாஸும் உணர்ந்தாராம்.