பட்டணத்து ராஜாக்கள்.
இந்தத் திரைப்படம் 1982 ஆம் ஆண்டு எஸ். எ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் விஜயகாந்துக்கு ஜோடியாக சில்க் ஸ்மிதா நடித்திருப்பார் இந்த திரைப்படமானது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
டௌரி கல்யாணம்.
விஜய் இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக ஸ்ரீவித்யா மற்றும் விஜியும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை கன்னட மொழியில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படமாகும்.
நூறாவது நாள்
மணிவண்ணன் இயக்கத்தில 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் வில்லன் ரோலில் நடித்துள்ளார். இந்த திரைப்படமானது மலையாளத்திலும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம்.
வைதேகி காத்திருந்தாள்.
சுந்தரராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம் தான் வைதேகி காத்திருந்தாள், இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் அவருக்கு ஜோடியாக ரேவதி அவர்கள் நடித்திருப்பார், இந்த திரைப்படமானது கன்னட மொழியிலும், தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படமாகும்.
கூலிக்காரன்.
1957 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அந்த காலத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் என்று கருதப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக ரூபிணி நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படம்.
பூந்தோட்ட காவல்காரன்.
1988 ஆம் ஆண்டு செந்தில்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் விஜயகாந்த் மற்றும் விஜயகாந்துக்கு ஜோடியாக ரேவதி அவர்கள் நடித்திருப்பார்கள் இந்த திரைப்படமானது பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படம், இத்திரைப்படத்தை சிங்கள மொழிகளிலும் தெலுங்கு மொழிகளிலும் ரீமேக் செய்து உள்ளார்கள்.
என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்.
இந்த திரைப்படம் 1989ஆம் ஆண்டு மனோ பாலா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக சுவாஷினியும் ரேகாவும் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படமானது ஹிந்தி மொழியிலும் தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்ட ஒரு திரைப்படம்.
ராஜநடை.
எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சீத்தா மற்றும் கௌதமி அவர்கள் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்து இருப்பார்கள். இதில் சரன் ராஜ் அவர் வில்லனாக நடித்து இருப்பார்கள். இந்த திரைப்படம் வந்து ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்ட ஒரு திரைப்படம்.
புலன் விசாரணை.
இது 1990ஆம் ஆண்டு செல்வமணி இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த திரைப்படம் இந்த திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக ரூபினி அவர்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்ட ஒரு திரைப்படமாகும்.
சிறையில் பூத்த சின்னமலர்.
அமிர்தம் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக பானுப்ரியா அவர்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் ராஜேஷ் அவர்களும் நடித்திருப்பார்.