கேப்டன் என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த் இவர் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் நீண்ட காலமாக கேப்டன் விஜயகாந்த் புகைப்படம் வெளியாகமல் இருந்து வந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் நடிகர் விஜயகாந்த் அவர்களும் ஒருவர் ஒரு காலகட்டத்தில் விஜயகாந்த் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் இளசுகள் நரம்பு புடைத்துவிடும் அந்த அளவு விஜயகாந்த் என்றாலே இளசுகளுக்கு வீரம் வந்துவிடும். இந்த நிலையில் விஜயகாந்த் அரசியலில் ஈடுபட்ட உடன் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
கடந்த சில ஆண்டுகளாகவே தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் அவர்களை பொது நிகழ்ச்சிகளில் பார்க்கவே முடியவில்லை அதுமட்டுமில்லாமல் அவரின் குரலை கேட்கவும் முடியவில்லை. இந்த நிலையில் விஜயகாந்த் குரலைக் கேட்க வேண்டும் அவரை பார்க்க வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படியிருக்கும் நிலையில் சமீபத்தில் விஜயகாந்த் அவர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையேவும் தொண்டர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விஜயகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு சில ஆண்டுகளாகவே முழு ஓய்வில் இருந்து வருகிறார் அதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோ பேசுவதே கிடையாது.
ஆனால் கட்சி அலுவலகத்திற்கு எப்போதாவது வந்து செல்வார் விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதனுக்காக கட்சியில் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வேறுவழியில்லாமல் மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகிறார்கள் தேமுதிக கட்சியின் நிலையும் சரிந்து கொண்டே போகிறது இந்த நிலையில் சமீபத்தில் 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் ஒட்டுமொத்தமாக 12838 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு நடைபெற்றது.
இதில் திமுக அதிமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து வந்த தேமுதிக வெறும் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 35 இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தேமுதிக தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் அந்த புகைப்படம் கூட சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.
விஜயகாந்தின் அந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் விஜயகாந்த் அந்த புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருப்பது பெரும் வேதனை அளிப்பதாக கூறுகிறார்கள் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள்.
இதோ அந்த புகைபடம்.