Vijayakanth : சினிமாவில் உதவி என்று கேட்பதற்கு முன்பே ஓடி ஓடி உதவி செய்தவர் விஜயகாந்த் இவரை புகழாதவர்களே கிடையாது சினிமாவில் உள்ள அனைவருக்கும் விஜய்காந்த் அவர்களை பிடிக்கும். அந்த அளவு சினிமாவிற்காக அரும்பாடு பட்டவர். விஜயகாந்த் சினிமாவில் பல கலைஞர்களை வாழ வைத்துள்ளார். அதற்கு சான்றாக பல நடிகர் மற்றும் நடிகைகள் பேட்டியில் கூறியதை நாம் கேட்டுள்ளோம்.
இந்த நிலையில் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் தீவிர சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். ஆனால் அவருடைய மகன் விஜய பிரபாகரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய தந்தையின் உடல்நிலை சற்று பின்னடைவாக தான் இருக்கிறது எனவும் அதே நேரத்தில் அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் எழுந்து பழைய நிலைமைக்கு மாறுவார் எனவும் தெரிவித்திருந்தார்.
சினிமாவில் கொடி கட்டி பறந்து பிறகு அரசியலிலும் தனது முத்திரையை பதித்தவர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தவர் விஜயகாந்தின் தேமுதிக கட்சி நன்றாக வளர்ந்து கொண்டிருந்த பொழுது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது அதன் பிறகு இவரால் கட்சி பணிகளை சரியாக கொண்டு போக முடியவில்லை.
தற்பொழுது விஜயகாந்த் அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் மகன் விஜய பிரபாகரன் கேப்டன் உடல் சற்று பின்னடைவாக தான் இருக்கிறது அதே நேரத்தில் விரைவில் குணமடைந்து 100 வயது வரை வாழ்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என கூறியுள்ளார் இவர் திடீரென இவ்வாறு கூறியது ரசிகர்கலிடையே மட்டுமல்லாமல் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் எழுந்து வா கேப்டன் சீக்கிரம் எழுந்து வா என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.