vijayakanth : மறைந்த கேப்டன் விஜயகாந்த் பற்றி பல பிரபலங்கள் பலவிதமாக பேசி வருகிறார்கள் ஆனால் ஒவ்வொரு பிரபலங்களும் விஜயகாந்தின் நல்ல உள்ளத்தை பற்றி தான் பேசுகிறார்கள் அந்த அளவு விஜயகாந்த் சினிமாவில் உள்ள நபர்களுக்கு ஓடி ஓடி உதவி செய்துள்ளார்.
சினிமாவில் நடித்து வந்த விஜயகாந்த் திடீரென அரசியலில் இறங்கினார். அப்படி இருக்கும் நிலையில் சில வருடங்களாக உடல்நிலை குறைவால் விஜயகாந்த் முடங்கி விட்டார் ஆனால் டிசம்பர் 28ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மறைந்தார்.
இவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் மேலும் வராத பிரபலங்கள் பலரும் விஜயகாந்த் அடக்கம் செய்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்த் குறித்த விஷயம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சங்கத்திற்கு தலைவராக விஜயகாந்த் பல உதவிகளை செய்துள்ளார் அது மட்டும் இல்லாமல் எம்ஜிஆர் காலத்திலேயே நடிகர் சங்க கடனை அடைக்க முடியாமல் இருந்தது ஆனால் விஜயகாந்த் அந்த கடனை அடைத்தார் எப்படியாவது நடிகர் சங்க கடனை அடைக்க வேண்டும் என்பதற்காக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் திரை நட்சத்திரங்களை வைத்து கலைநிகழ்ச்சியை நடத்தினார்.
கலை நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்த நிகழ்ச்சியை ஆர்கனைஸ் செய்த நபர் நடிகர் சங்கத்திற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்ய முயற்சி செய்துள்ளார் உடனே விஜயகாந்த் நிகழ்ச்சியை ஆர்கனைஸ் செய்த நபரிடம் சென்று பேசினார் ஆனால் அவர் திமிராக பணம் தர முடியாது என பேசியதால் விஜயகாந்த் மூக்கின் மேல் கோபம் வந்தது.
உடனே விஜயகாந்த் அந்த நபரை கழுத்தை பிடித்து தூக்கி சுவற்றில் ஆணி அடித்தது போல் தொங்க விட்டார் இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தயாரிப்பாளர் டி சிவா நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் பேசியதாவது மிகவும் தைரியத்துடன் நியாயத்துடன் போராடியவர் விஜயகாந்த் என கூறியுள்ளார்.