எனக்குத் தெரிந்த ஒரே ஒரு வள்ளல் விஜயகாந்த் தான்..! அவருக்கு நிகர் யாருமில்லை – முன்னணி நடிகர் பேச்சு.!

vijayakanth-
vijayakanth-

கேப்டன் விஜயகாந்த் சினிமா உலகில் கால் தடம் பதித்ததில் இருந்து கடைசி வரையிலும் சினிமா உலகில் நேர்மையாக இருந்துவிட்டு போய் உள்ளார் என இவருடன் பயணித்த சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர். மேலும் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன உணவு சாப்பிடுகிறோமோ அதே தான் டெக்னீசியன் தொடங்கி எல்லோரும் சாப்பிட வேண்டும் என்ற அக்கறை கொண்டவரும் அவர் என சொல்லப்படுகிறது.

சினிமா உலகில் பல வெற்றி படங்களையும் கொடுத்து ஓடியவர் சினிமா உலகில் தன்னால் என்ன பண்ண முடியுமோ அந்த அளவிற்கு பண்ணிவிட்டு அதன் பிறகு தான் அரசியல் பிரவேசம் அவர் கண்டார். இப்பொழுது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜயகாந்த் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது விஜயகாந்த் சினிமா உலகில் கால் தடம் பதித்து இதுவரை 40 வருடங்கள் ஆகிறது இந்த நிலையில் அதை கொண்டாடும் வகையில் விழா ஒன்று நடந்தது அதில் சரத்குமார் கலந்துகொண்டு விஜயகாந்த் பற்றி பேசி உள்ளார்.

சினிமா உலகில் எல்லாவற்றையும் இழந்து நின்ற போது எனக்கு கை கொடுத்து தூக்கி விட்டவர் விஜயகாந்த். புலன் விசாரணை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைத்து அழகு பார்த்தார் அதன் பின் கேப்டன் பிரபாகரன் படத்தில் அவர் ஹீரோவாக இருந்தாலும் எனக்கு ஒரு கதாபாத்திரத்தை எவ்வாறு தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்.

sarath kumar
sarath kumar

ஆனால் அந்த சமயத்தில் எனக்கு கழுத்தில் முறிவு ஏற்பட்டு படுத்து கிடந்தேன் நான் சரியாகும் வரை அந்த படத்தை எடுக்காமல் தள்ளி வைத்தார் பின் நான் சரியாகி வந்ததும் படப்பிடிப்பு நடந்தது என்னுடைய காட்சிகளும் எடுக்கப்பட்டது எனக்குத் தெரிந்த வள்ளல் என்றால் அது விஜயகாந்த் தான் நேர்மையான மனிதரும் விஜயகாந்த் தான் அவரை போன்ற ஒருவரை பார்க்க முடியுமா என்பது கூட ஒரு கேள்வி குறிதான் என புகழ்ந்து பேசினார் நடிகர் சரத்குமார்.