80,90களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகர் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான். இவரை அனைவரும் அன்பாக கேப்டன் என்று தான் அழைப்பார்களாம். விஜயகாந்த் நடந்து கொண்ட ஒரு குறும்புத்தனமான செயல் விபரீதத்தில் முடிந்ததாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயகாந்த் சூட்டிங் ஸ்பாட்டில் ஓய்வு நேரங்களில் தன்னுடன் நடிக்கும் துணை நடிகர்களுடன் சரிக்கு சமமாக உட்கார்ந்து சீட்டு கட்டு ஆடி அதில் ஜெயித்து அந்த காசை வைத்து அங்கு உள்ள அனைவருக்கும் பிரியாணி வாங்கி கொடுப்பாராம் இதைப்பற்றி நடிகை வடிவுக்கரசி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் நடிகர் விஜயகாந்தின் ஷார்ட் முடிந்தவுடன் கேரவானுக்கோ அல்லது வேறு எங்கும் செல்லாமல் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் எப்படி நடிக்கிறார்கள் என்று பார்த்து ரசிப்பாராம் அது மட்டுமல்லாமல் அடிக்கடி கேமரா முன்பு போய் உட்கார்ந்து ஏற்கனவே தனது காட்சிகளை படமாக்கப்பட்ட அனைத்து காட்சிகளையும் திரும்பி திரும்பி பார்ப்பாராம்.
அவர் அப்படி தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் சூட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கும் போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜயகாந்த் சிறிய கல்லை எடுத்து அதில் நடிக்கும் ஏதாவது ஒரு நடிகரின் மீது குறி வைத்து அவரை அடிப்பாராம் அதன் பிறகு எதுவும் செய்யாத பப்பா போல் அங்கும் இங்கும் திரும்பி என்ன நடந்தது என்று தெரியாமல் நடித்துக் கொண்டிருப்பாராம்.
மேலும் நடிகர் விஜயகாந்த் மதிய உணவு இடைவேளையின் போது அனைவரும் சாப்பிட்டார்களா என்று நலம் விசாரித்தது பிறகுதான் அவர் சாப்பிட ஆரம்பிப்பாராம். இப்படி குறும்புத்தனமான இருக்கும் விஜயகாந்த் ஒரு சில நேரங்களில் கடுமையாக கோபப்படுவதையும் பார்த்துள்ளதாக மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.
அதன் பிறகு நடிகர் விஜயகாந்த் அரசியலில் இறங்கியதற்கு பிறகு அனைத்து குறும்புத்தனங்களையும் விட்டுவிட்டு சாதாரண நபராக தன்னை தானே மாற்றி கொண்டதாக அவர் கூறியுள்ளார்.