தளபதி விஜய் தற்போது நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் பீஸட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஏப்ரல் 13 ஆம் தேதியான நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகவிருக்கிறது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் விஜய் ரசிகர்களின் அன்பால் இன்று புகழின் உச்சத்தில் இருந்து கொண்டிருக்கிறார். தளபதி விஜய் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்படியான பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். சமீபகாலமாக விஜய் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டி வருகிறது.
விஜய்யின் இந்த வளர்ச்சி இன்று பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விஜயின் கால்ஷீட் கிடைக்குமா என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கேரளா ஆந்திரா கர்நாடகா என பல மாநிலங்களிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்து வசூல் சாதனை செய்து வருகிறார் விஜய்.
இப்படி விஜய்யின் வளர்ச்சியை சொல்லிக்கொண்டே போகலாம் இது எல்லாம் தெரிந்த ஒன்றுதான் ஆனால் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் பல தடுமாற்றங்களை சந்தித்தார் அப்போது விஜய்யை எப்படியாவது உயர்த்தி விட வேண்டும் என விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் மனம் தளராமல் விஜயை வைத்து பல்வேறு படங்களை எடுத்தார் அந்தத் திரைப்பங்கள் தோல்வியை சந்தித்தாலும் எப்படியாவது வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என விடாமுயற்சியுடன் முயற்சி செய்து வந்தார்.
இதன் பக்க விளைவாக பெரும் நஷ்டத்தை அடைந்து பெருந்தொகைக்கு கடனாளியாக மாறினார் அப்பொழுது எஸ்ஏ சந்திரசேகர் கடனை அடைப்பதற்காக சென்னையில் உள்ள அவரது வீட்டை விற்க முயன்றார் எப்படியாவது கடனை அடைக்க வேண்டும் என்ற முயற்சியில் கடைசியில் ஒரே ஒரு படம் எடுக்கலாம் என எஸ் ஏ சந்திரசேகர் ஆசை பட்டார் அதேபோல் அதில் வரும் லாபத்தை வைத்து கடனை அடைக்க வேண்டும் எனவும் முடிவு செய்திருந்தார்.
அப்படி தான் செந்தூரப்பாண்டி திரைப்படம் உருவானது இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இதில் நடிப்பதற்கு விஜயகாந்திடம் சம்மதம் வாங்கினார் அதேபோல் விஜயகாந்த் அவர்களும் சம்பளமே இல்லாமல் நடித்துக்கொடுத்தார் படமும் வெற்றியடைந்தது எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் தன்னுடைய கடனை அடைத்தார்.
இன்று தமிழகமே தூக்கி வைத்து தலையில் ஆடும் விஜய்யை உயர்த்திவிட்டவர்களில் விஜயகாந்திற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. விஜய் வளர்ச்சி அடைந்த அதற்கு விஜயகாந்த் என்ற நல்ல மனிதர் பங்கு இருக்கிறது என விஜய் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.