vijayakanth : பொதுவாக ஒருவர் வாழும்போது எத்தனை பேர் நம்மளை நினைக்கிறார்கள் என்பதை விட இறந்த பிறகு எத்தனை பேர் நமக்காக அழுகிறார்கள் என்பது தான் நம் வாழ்ந்ததற்கு அர்த்தம். அதற்கு என்னையே எடுத்துக் கொள்ளலாம் நான் வாழ்வதற்கு ஒரு அர்த்தம் இருந்திருக்கிறது நான் இறந்த பிறகு எத்தனை பேர் என்னை நினைக்கிறார்கள் என பேசியவர் தான் எம்ஜிஆர். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தமாக விளக்கியவர் நடிகர் விஜயகாந்த்.
சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த வானத்தைப்போல மனம் படைத்த தென்னவனே இந்த பூமியை போல குணம் படைத்த மன்னவனே என்ற பாடல் விஜயகாந்திற்காகவே எழுதப்பட்ட பாடல் தான் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமாகிவிட்டார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்படும் இடம், நேரம் குறித்த முழு விவரம் இதோ..
இவரின் மறைவு சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் சாமானிய மக்களையும் தொண்டர்களையும் மிகவும் பாதித்துள்ளது. ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் உடல்நலம் தேறி வருவார் என கோடான கோடி மக்கள் பிரார்த்தனை செய்தார்கள் ஆனால் கடைசியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டது.
நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு முழு அரசியல் மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்படும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். சினிமாவில் ஆரம்ப காலகட்டத்திலேயே ஷூட்டிங்கில் கீழ் நிலையில் இருக்கும் ஊழியர்களின் நலனில் அக்கறை காட்டியவர் விஜயகாந்த் அதேபோல் தான் நடித்த ஒரு சூட்டிங்கில் அடிபட்டு இருந்த ஸ்டாண்ட் நடிகரின் குடும்பத்துக்காக ஒரு பெரிய தொகையை நிதியாக வழங்கியவர்.
அதேபோல் ஒரு கூலி தொழிலாளி மகளுக்கு டாக்டர் சீட் கிடைக்க பண வசதி இல்லாமல் கல்லூரியில் சேரவில்லை இந்த இந்த விஷயம் பிரபல பத்திரிக்கை அலுவலகத்திற்கு எப்படியோ கடிதத்தின் மூலம் வந்தது உடனடியாக விஜயகாந்த் க்கு போன் செய்து தகவலை கூறியுள்ளார்கள் அந்த பத்திரிக்கை ஆசிரியர். விஜயகாந்த் கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் உடனடியாக அந்த மாணவியின் பெற்றோரை வந்து பார்க்க சொல்லுங்கள் எனக் கூறிவிட்டார்.
அந்த மாணவியின் முழு படிப்பு செலவையும் தந்து விடுகிறேன் என்று கூறி வாக்கு கொடுத்தார் வறுமையும் பசி கொடுமையும் ஏழைகளின் இணையா பிரியா பங்காளிகள் இதை நன்கு உணர்ந்தவர் தான் எம்ஜிஆர் தன்னை சந்திக்க வரும் யாரையும் முதலில் வரவேற்று உணவளித்து தான் உபசரித்து அனுப்புவார் அதன் பிறகு சினிமா துறையில் அவரின் இடத்தை நிரப்பியவர் விஜயகாந்த் மனிதநேயம் அவரது பிறவி குணம்.
அதேபோல் சினிமா அலுவலகத்தில் எப்பொழுதும் உலை கொதித்துக் கொண்டே இருக்கும் யார் வேண்டுமானாலும் அங்கு சென்று பசியாறிக் கொள்ளலாம் தனது ஷூட்டிங்கில் தான் சாப்பிடும் அதே உணவு பட குழுவினர் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பது விஜயகாந்தின் கொள்கை.
பேருக்கு சாப்பாடு கொடுக்காமல் அனைவருக்கும் ருசியான அசைவ சாப்பாடு தான் போடுவார் இதனை இன்றளவும் பல நடிகர் நடிகைகள் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். அதேபோல் பெரியவர்களை மதிக்கும் குணம் கொண்டவர் கருணாநிதி எதிர்த்து எதிரணியில் இருந்த பொழுது கருணாநிதி மறைந்த பிறகும் அவரை என்றைக்குமே மரியாதை உடன் தலைவர் என்றே கூப்பிடுவார்.
எம்ஜிஆர் காலத்திலேயே அடைக்க முடியாத நடிகர் சங்க கடனை தான் தலைவர் ஆன பிறகு முழு கடனையும் அடைத்து நடிகர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்டுவதற்கு நிதியையும் திரட்டி கொடுத்தவர் 2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் திமுகவை மதுரையில் தொடங்கி 9 மாதத்திற்குள் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்தவர் தனக்கு சம்பந்தமே இல்லாத விருத்தாச்சலத்தில் பாமகவின் செல்வாக்கை முறியடித்து 2006 எம்எல்ஏ ஆனார்.
அதேபோல் அதிமுக வெற்றி பெற வேண்டிய 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதன் வெற்றி வாய்ப்பை தனது கட்சி ஓட்டுக்களால் பிரித்து பறித்தார் இதனை உணர்ந்து கொண்ட ஜெயலலிதா அடுத்த தேர்தலில் விஜயகாந்த் உடன் கூட்டணியை அமைத்தார் அதில் 29 தொகுதிகளை கைப்பற்றி கட்சி ஆரம்பித்த ஆறு ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார் விஜயகாந்த்.. நடிகர் அரசியல்வாதி என்ற அடையாளம் மட்டுமல்லாமல் சமூக நல வாதியாக இருந்தவர் கேப்டன் விஜயகாந்த்.
வரலாற்று சாதனை படைத்த நடிகர் விஜயகாந்த்.. ஒரே ஆண்டில் இதனை படங்களா?
இவரின் மறைவு சினிமா துறை அரசியல் மட்டுமல்லாமல் இந்த சமூகத்திற்கு ஒரு பெரும் அடியாக விழுந்துள்ளது..