பாஷா ரஜினி ஸ்டைலில் தனுசுக்கு உதவிய விஜயகாந்த்.! இந்த மனசு தான் சார் கடவுள் எனக் கூறும் ரசிகர்கள்…!

vijayakanth
vijayakanth

சினிமாவில் முதன்முதலாக வில்லனாக அறிமுகமானவர் நடிகர் விஜயகாந்த் ஆனால் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற முனைப்போடு அயராது பாடுபட்டார். அப்படி ஹீரோவாக நடித்த திரைப்படம் பெரிதாக வெற்றி பெறாததால் தன் விடாமுயற்சியை கைவிடாமல் தூரத்து இடிமுழக்கம் என்ற திரைப்படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்தார் இந்த திரைப்படம் மாபெரும் ஹீட்டடித்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் அமைந்தது.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் நடிக்கும் திரைப்படம் நல்ல கதை உள்ள திரைப்படமாக தேர்ந்தெடுத்து நடித்த வந்தார். அந்த சமயத்தில் ரஜினி கமலின் கொடி உயர்ந்து பறந்து கொண்டிருந்தது. ஆனால் விஜயகாந்த் அவர்களுக்கு இணையாக உயர்ந்தார்  அவருக்கென்று தனி ரசிகர்கள் உருவானார்கள். அதேபோல் பல இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அதில் குறிப்பிட தகுந்தவர்கள் சினிமா கல்லூரியிலிருந்து வந்த ஆபாவாணன் அரவிந்த்ராஜ் ஆகியோர் இயக்கத்தில் வெளியாகிய ஊமை விழிகள் திரைப்படத்தில் நடித்து மாபெரும் ஹிட்டடித்தது. விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்த பிறகு, தான் வளர்ந்து விட்டோம் அதோடு இல்லாமல் மாறாக தான் வளர்ந்தது மட்டுமல்லாமல் மற்றவர்கள் வளர வேண்டும் தான் பட்ட கஷ்டத்தை யாரும் படக்கூடாது என தன்னால் முடிந்த அளவு உதவி செய்தார் அது மட்டும் இல்லாமல் அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் இணைந்து தான் சென்னைக்கு வந்தார்கள் அதேபோல் இருவரும் இணைந்து பல உதவிகளை செய்தார்கள்.

இப்ராஹிம் ராவுத்தர் இறந்துவிட விஜயகாந்த் உடல்நிலை சரி இல்லாமல் முழு ஓய்வில் இருக்கிறார் அவர் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்ப வேண்டும் என அவருடைய ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் பிரார்த்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் தனுஷ் அக்காவின் அழுகை விஜயகாந்த்துக்கு கேட்டது. அதாவது தனுஷின் இரண்டாவது அக்கா  மருத்துவத்திற்கு தேர்வு எழுதி இறந்தார் ஆனால் அவருக்கு கட் ஆஃபில் இரண்டு மார்க் குறைந்துவிட்டது இதனால் அவருடைய அக்கா வீட்டில் உட்கார்ந்து ஓயாமல் அழுது கொண்டே இருந்தார்.

இந்த சூழ்நிலையில் விஜயகாந்த் எதெர்ச்சையாக அங்கு வந்தாராம் வந்தவர் என்ன பாப்பா ஏன் அழுகுற என கேட்டுள்ளார் கஸ்தூரி ராஜா நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். உடனே கஸ்தூரிராஜாவை கையோடு அழைத்துக் கொண்டு ராமச்சந்திரா மருத்துவ கல்லூரிக்கு சென்று மருத்துவ சீட் வாங்கி கொடுத்தாராம். இப்படி எந்த வழியிலேயோ தனுசுக்கும் விஜயகாந்த் உதவி செய்துள்ளார்.

உதவி என்று கேட்பதற்கு முன்பு வாரி வாரி வழங்கக் கூடியவர் விஜயகாந்த் என்பது அனைவருக்கும் தெரியும் அதற்கு சான்றாக பல விஷயங்கள் இணையதளத்தில் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.