சினிமா உலகில் பெரும்பாலும் உண்மையை பேசினால் இருக்க முடியாது என கூறுவார்கள் ஆனால் ஒரு சில சினிமா நடிகர்கள் சினிமாவில் வேஷங்களை போட்டாலும் நிஜ வாழ்க்கையில் எந்த வேஷமும் போடாமல் உண்மையை மட்டுமே பேசக்கூடியவர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்கள் வெகு குறைவு. குறிப்பாக தமிழ் சினிமாவில் விரல் விட்டு என்னும் அளவிற்கு தான் இருக்கிறார்கள் என பல சினிமா பிரபலங்கள் சொல்லி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளிப்படையாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். விஜயகாந்த் சினிமா உலகில் பெரும்பாலும் கிராமத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி மேல் வெற்றியை கண்டார் பின் சினிமா உலகில் எவ்வளவு வெற்றியை ருசித்து இருந்தாலும் மற்றவர்களுடன் ரொம்ப சகஜமாகவே பழகுவார் அதேசமயம் உண்மையை மட்டுமே பேசுவாராம்.
இவருடன் பழகியவர்கள் பலரும் சொல்லும் முதல் விஷயம் நடிகர் விஜயகாந்த் நேர்மையான ஒருவர் எதற்கும் பயப்பட மாட்டார் என கூறுவார்கள் சினிமாவில் இருப்பவர்களே இப்படி விஜயகாந்தை புகழ்ந்து பேசி வருகின்றனர். எப்படி இருக்கின்ற நிலையில் விஜயகாந்தின் குணம் அப்படியே அஜித்திற்கு இருப்பதாக ராசி பட இயக்குனர் முரளி அப்பாஸ்..
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம். உண்மையில் விஜயகாந்த் அஜித்தின் இன்னொரு வெர்ஷன் இரண்டு பேருமே திரையில் மட்டுமே வேஷத்துடன் இருப்பார்கள் வெளியில் அந்த வேஷத்தை கலைத்துவிட்டு இருக்கத்தான் நினைப்பார்கள் அதிலும் விஜயகாந்த் தனது வேஷத்தை கலைத்துவிட்டு..
அநியாயங்களுக்கு குரல் கொடுக்க நினைப்பார் யாராக இருந்தாலும் சண்டை போட தயங்க மாட்டார் அவ்வளவு தைரியமான மனிதர். இவ்வாறு கேப்டன் பற்றி புகழ்ந்து பேசினார் மேலும் அப்பாஸ் பல பேட்டிகளில் கூட விஜயகாந்த் நிஜமாலுமே பயப்படாதவர் நேர்பட பேசக்கூடியவர் என பேசி நிரூபித்துள்ளார் என கூறப்படுகிறது.