17 திரைப்படம் ஒரே இயக்குனர் சாதனை படைத்த விஜயகாந்த்.! 70% மெகா ஹிட்.!

vijayakanth S. A. Chandrasekhar

Vijayakanth : இன்று ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்த் ஒரு காலகட்டத்தில் அயராது ஓடி உழைத்துக் கொண்டிருந்தவர் அந்த அளவு பல திரைப்படங்களில் நடித்து வந்தவர். ரஜினி, கமல் ஆகியோர் முன்னிலையில் இருக்கும் பொழுது அவர்களுக்கு போட்டியாக வளர்ந்தவர் தான் விஜயகாந்த். ஆரம்ப காலகட்டத்தில் விஜயகாந்த் படத்தில் நடிக்க  பல நடிகர் நடிகைகள் மறுத்தார்கள்  ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் அயராது உழைத்தவர் விஜயகாந்த்.

தன்னம்பிக்கை இருந்தால் கண்டிப்பாக முன்னேறலாம் என பலருக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார் ஏனென்றால் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்தவர்களில் இவரும் ஒருவர்.  இன்று ஒரே ஒரு இயக்குனர் இயக்கத்தில்  மூன்று அல்லது நான்கு திரைப்படம் நடித்தாலே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் நடிகர்கள் இதற்கு மேல் இந்த இயக்குனர்களுடன் நடித்தால் வேலைக்காகாது என அவர்களுக்கு கால் சீட் கொடுக்க மாட்டார்கள்.

ஆனால் தற்பொழுது உள்ள நிலவரத்திற்கு நேர் எதிராக விஜயகாந்த் இருந்துள்ளார். நடிகர் விஜயகாந்த் நடிக்க துவங்கிய காலத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து முன்னணி நடிகராக மாற்றிய பிரபல இயக்குனர் இயக்கத்தில் மட்டும் 17 திரைப்படங்களில் நடித்துள்ளார். 17 திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்கள் வெற்றி பெறாமல் இருந்தாலும் 70% படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது.

விஜயகாந்தின் வளர்ச்சியில் மற்றும் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகித்த ஆசன இயக்குனர் வேறு யாரும் கிடையாது தளபதி விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தான் இப்படி இவர் இயக்கத்தில் நடித்த திரைப்படங்கள் சில வெற்றி பெறாமல் இருந்தாலும் பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் திரைப்படங்களாக மாறி உள்ளது.

அந்த வகையில் நெஞ்சில் துணிவிருந்தால் 1981 ஆம் ஆண்டு வெளியாகியது, நீதிப் பிழைத்தது-1981, 1982 ஆம் ஆண்டு பட்டணத்து ராஜாக்கள், 1982 -ஆம் ஆண்டு ஓம் சக்தி, 1983 -ஆம் ஆண்டு சாட்சி, 1984- ஆம் ஆண்டு வெற்றி, 1984- ஆம் ஆண்டு வீட்டுக்கு ஒரு கண்ணகி, என அடுத்தடுத்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 10 திரைப்படங்கள் நடித்து மிரட்டி இருந்தார் இது அனைத்தும் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்கள் தான்.

S. A. Chandrasekhar
S. A. Chandrasekhar

1986 ஆம் ஆண்டு எனக்கு நான் நீதிபதி, 1986- ஆம் ஆண்டு வசந்த ராகம், 1987 ஆம் ஆண்டு சட்டம் ஒரு விளையாட்டு, 1989 ஆம் ஆண்டு ராஜநடை, 1993 ஆம் ஆண்டு ராஜதுரை, 1999 ஆம் ஆண்டு பெரியண்ணா என மொத்தம் 17 திரைப்படங்கள் விஜயகாந்த் அவர்களை வைத்த எஸ் ஏ சந்திரசேகர் இயக்கியிருந்தார் அதுமட்டுமில்லாமல் விஜயகாந்த் வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து ரசித்தவர்.

எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்த் அவர்களை வைத்து ஆக்ஷன் திரைப்படத்தை மட்டும் எடுக்காமல் மாறுபட்ட கதாபாத்திரத்திலும் அவரை காமித்து விஜயகாந்த் திறமையை வெளிக் கொண்டு வந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பாலச்சந்தர் எப்படி உறுதுணையாக இருந்தாரோ அதேபோல் விஜயகாந்த் அவர்களுக்கு திரை பயணத்தில் எஸ்எஸ்சி சந்திரசேகர் உறுதுணையாக இருந்துள்ளார்.