தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் தனது உடன் இருக்கும் பல நடிகர்களை உயர்த்தி விட்டவர் தான் விஜயகாந்த் இவரது திரைப்படங்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் ஏனென்றால் இவர் திரைப்படத்தில் மட்டும் அப்படி நடந்து கொள்ளாமல் தனது நிஜ வாழ்க்கையிலும் பல நடிகர்களுக்கு தன்னைத் தேடி வருபவர்களுக்கு தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து அசத்தி விடுவார் என்றே கூறலாம்.
அந்த வகையில் பார்த்தால் தற்பொழுது விஜயகாந்த் அவர்கள் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது என்று தான் கூற வேண்டும் இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கும் நல்ல மரியாதை தருவாராம். அவர்கள் ஏதாவது ஒரு உதவி கேட்டால் உடனே தடுக்காமல் செய்யும் குணம் உடையவர்.
இந்நிலையில் விஜயகாந்த் தனதுடன் நடித்த காமெடி நடிகருக்காக சுமார் 15 பேரை சவுக்க தோப்பில் வைத்து அடித்து துரத்தினாராம் ஆம் விஜயகாந்த் ராம்கி நிரோஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் செந்தூரப்பூவே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஈ.சிஆரில் உள்ள சவுக்கு தோப்பில் நடந்ததாம் அப்பொழுது அந்த ஊரைச் சேர்ந்த ஊர்காரர்கள் ஒரு சிலர் குடித்துவிட்டு காமெடி நடிகர் செந்தில் இடம் சண்டை போட்டு உள்ளார்களாம்.
இதை கவனித்த விஜயகாந்த் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்களை அடித்து ஓட விட்டாராம் அப்பொழுது கையில் எந்த பொருள் கிடைத்தாலும் அதை வைத்து சண்டை போட்டு அவர்களை அடித்து விரட்டி விட்டாராம். இருப்பினும் அவர்கள் அந்தப் பிரச்சனையை அப்படியே விடாமல் அது ஒரு பெரிய கலவரமாக மாறிவிட்டதாம்.
பின்பு ஊர்காரர்கள் எஸ் பி போன்ற பலர் தலையிட்டு தான் இந்த பிரச்சனையை ஒரு வழியாக சரி செய்தார்களாம்.ஆனால் இந்த பிரச்சனை தனக்கு தான் வரவில்லையே எதற்காக நாம் சண்டை போட வேண்டும் என்று மற்றவர்களைப் போல் இல்லாமல் தன்னுடன் நடிக்கும் நடிகருக்காக விஜயகாந்த் இந்த காரியத்தை செய்ததாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.