80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகர் என்றால் அது நம்ம நடிகர் கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான். மேலும் விஜயகாந்த் என்று சொல்வதை விட கேப்டன் என்று சொன்னால் மொத்த திரையுலகமும் கொண்டாடும் தற்போது உள்ள முன்னணி நடிகர்களுக்கு இவர் ஒரு வழிகாட்டி என்று தான் சொல்ல வேண்டும்.
அது மட்டுமல்லாமல் தன்னுடன் இல்லை தனக்கு கீழ் வேலை பார்க்கும் வேலையாட்களாக இருந்தாலும் சரிக்கு சமமாக பார்ப்பவர் நடிகர் விஜயகாந்த். இவர் தற்போது உடல் நல பிரச்சனையின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சில நாட்களாக ஓய்வில் இருந்து வருகிறார் நடிகர் விஜயகாந்த் குறித்து ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.
அந்த நிகழ்ச்சியில் ராதாரவி, ரோபோ சங்கர், டி சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் பலரும் நடிகர் விஜயகாந்த் பற்றி புகழ்ந்து பேசி இருந்தனர் ஆனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி சிவா மேலும் ஒரு சுவாரசியமான ஒரு தகவலை விஜயகாந்த் பற்றி கூறியிருக்கிறார்.
அதாவது முதன் முதலாக படப்பிடிப்பு தளத்தில் எலை போட்டு சாப்பாடு வைத்தது கேப்டன் தான். அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜயகாந்த் நடித்து கொண்டிருந்த படபிடிப்பு தளத்திலிருந்து அருகாமையில் தான் கமல்ஹாசன் நடித்த வெளியான நாயகன் படத்தின் படபிடிப்பு நடந்தது.
அப்போது அந்த படத்தின் இயக்குனரான மணிரத்தினம் அவர்கள் பட குழு மற்றும் படங்களில் நடித்து வரும் குணச்சித்திரங்கள் உள்ளிட்டவர்களுக்கு தக்காளி சாதம் தான் கொடுத்தார். ஆனால் கேப்டன் விஜயகாந்த் அப்படி கிடையாது அனைவரையும் சரிசமமாக பார்த்து வட பாயாசத்துடன் சாப்பாடு போட்டு அசத்தினர் அது மட்டுமல்லாமல் அவர்களுடன் நடிகர் விஜயகாந்தும் சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. என்று டி சிவா அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.