நடிகர் திகலம் சிவாஜியால் முடியாததை செய்து காட்டிய விஜயகாந்த்.. கருப்பு எம்ஜிஆர் – னா சும்மாவா.?

Vijayakanth
Vijayakanth

Vijayakanth : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வெற்றி கண்டு வந்தவர் கேப்டன் விஜயகாந்த் இவர் திரை உலகில் 150 க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றது குறிப்பாக டாப் ஹீரோக்களின் 100 வது படம் பெரும்பாலும் தோல்வி படங்களாக இருந்து வந்துள்ளன

ஆனால் விஜயகாந்தின் நூறாவது படம் கேப்டன் பிரபாகரன் அதிரி புதிரி ஹிட் அடித்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.. ஒரு காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய விஜயகாந்த் தனது அந்தஸ்தையும் பார்க்காமல் பல படங்களில் கௌரவ இடங்களில் நடித்திருக்கிறார் அப்படி வைதேகி காத்திருந்தால், நூறாவது நாள்..

இரும்பு ராடை தூக்கிக்கிட்டு அடிக்க போன கேப்டன் விஜயகாந்த்.. வெடவெடுத்து நின்ற இயக்குனர் பாரதிராஜா..! உண்மையாகவே நடந்த சம்பவம்

பூந்தோட்ட காவல்காரன், ஊமை விழிகள் என சொல்லிக் கொண்டே போகலாம் இப்படியப்பட்ட விஜய்காந்த் விருதகிரி படத்திற்கு பிறகு முழுநேர அரசியலில் களம் இறங்கினார். ஆரம்பத்திலேயே விஜயகாந்தூக்கு
பெரிய ஆதரவு இருந்தது. முதலில் எம்எல்ஏவாக அரியணை ஏறினார் அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் என படிப்படியாக தனது உயர்த்தி கொண்டே போனார்.

அடுத்த சிஎம் ஆக வருவார் என பலரும் கூறிய நிலையில் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வெடுத்து வந்தார் கடந்த மாதம் கூட அவர் மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்த தகவல் தற்பொழுது திரையுலகினர் மட்டுமின்றி தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள் ஆக்கி உள்ளது.

விஜயகாந்த் vs ராமராஜன் : 25 முறை நேருக்கு நேர் மோதியதில் ஜெயித்தது யார் தெரியுமா.?

விஜயகாந்த் சினிமா உலகில் தான் மட்டும் பலராமல் தன்னை சுற்றி இருந்தவர்கள் மற்றும் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டார் மேலும் தான் பட்ட கஷ்டங்கள் யாரும் படக்கூடாது என ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருக்கும் கறி விருந்து சாப்பாடு போட்டார். தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்கு தூக்கிக்கொண்டு சென்றார் இப்படிப்பட்டவர் இன்று நம்முடன் இல்லாதது மிகப்பெரிய ஒரு இழப்பாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜயகாந்த் பற்றி நமக்குத் தெரியாத பல தகவல்கள் வெளிவருகின்றன சினிமா உலகில் நடித்த பலரும் அரசியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள் அப்படி சிவாஜி, பாக்யராஜ், டி ராஜேந்தர் கார்த்தி என பல பிரபலங்கள் கட்சி தொடங்கியிருந்தாலும் தனித்து நின்று வெற்றி பெற முடியாத தமிழகத்தில் தனி ஆளாக யாருடைய ஆதரவும் இன்றி வெற்றி பெற்றார்.