சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் முதல் இடத்தை பிடிக்க போட்டி போட்டுக் கொள்வது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு முதலிடத்தை பிடிக்க ரஜினி கமல் விஜயகாந்த் போன்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடினார்கள்.
ரஜினி ஒரு பக்கம் ஆக்சன் மற்றும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க மறுபக்கம் விஜயகாந்த் கிராமத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ஓடினார் இதனால் இருவருக்கும் இடையே மிகப்பெரிய ஒரு போட்டி நடந்தது சினிமா உலகில் படங்களின் மூலம் மோதிக்கொண்டாலும்..
நிஜ வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவுவதில் இருவருமே நல்லவர்கள் மேலும் அவ்வபொழுது சில படங்களை விட்டுக் கொடுத்தும் உள்ளனர் அந்த வகையில் 80 காலகட்டங்களில் நடிகர் விஜயகாந்த் நடித்த ஒரு சில படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன அப்பொழுது அந்த சரிவிலிருந்து மீள ரஜினி தான் அவருக்கு உதவி உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த ஒரு படத்தை தமிழில் ரஜினி வாங்கியுள்ளார் ஆனால் அந்த கதை தன்னைவிட விஜயகாந்த்க்கு தான் சூப்பராக பொருந்தும் என்பதால் கலை புலி தான் அவர்களிடம் நீங்கள் அந்தப் படத்தில் விஜயகாந்தை நடிக்க வையுங்கள் எனக் கூறினார் ரஜினி. அந்த திரைப்படம் தான் கூலிக்காரன்.
இந்த படத்தில் விஜயகாந்த் உடன் கைகோர்த்து ராதாரவி, ரூபினி மற்றும் இசையமைப்பாளராக டி ராஜேந்தர் ஆகியோர் பணியாற்றினார் படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டாலும், நிஜ வாழ்க்கையில் நல்ல நண்பர்களாகவும் விட்டுக் கொடுத்து படங்களில் நடிப்பதுமாகவும் இருந்து வந்துள்ளனர்