Vijayakanth : 80 காலகட்டத்தில் ரஜினி, கமல், மோகன் போன்ற நடிகர்கள் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்து உச்ச நட்சத்திரமாக இருந்தனர் இவர்களுக்கு நிகராக அப்பொழுது பார்க்கபட்டவர் கேப்டன் விஜயகாந்த் ஆரம்பத்தில் கிராமத்தில் மண்வாசனை வீசும் படங்களில் நடித்து வந்த இவர் பிறகு அனைத்து மக்களையும் கவரும் வகையிலான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.
அந்த படங்களும் வெளிவந்து வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல் ரஜினி, கமலை ஆச்சரியப்பட வைத்தார். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இணையான ஓடிக்கொண்டிருந்தார். சினிமாவில் எவ்வளவு எவ்வளவு வெற்றியை கண்டாரோ அதே அளவுக்கு மக்கள் மற்றும் ரசிகர்களை சம்பாதித்தார். தன்னுடைய படங்களில் பணியாற்றும் பெரிய நடிகர் தொடங்கி லைட் மேன் வரை அனைவருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கறி விருந்து சாப்பாடு போட்டு அழகு பார்த்தார்.
மேலும் தன்னை நம்பி வந்து உதவி கேட்கும் பலருக்கும் காசை அள்ளிக் கொடுத்தார் இதனாலேயே விஜயகாந்தை பலரும் கேப்டன் என செல்லமாக அழைத்தனர் திரை உலகில் மாஸ் காட்டிய விஜயகாந்த் அரசியலில் அதிகம் கவனம் செலுத்தினார் எதிர் கட்சி தலைவராக அமர்ந்து அசத்தினார் தற்பொழுது உடல்நிலை குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் விஜயகாந்த் சினிமாவில் நடிக்கும் போது அவருக்கு பல பட்டப் பெயர்கள் வைத்து அழைத்துள்ளனர் பொதுவாக ஒரு நடிகருக்கு இரண்டு அல்லது மூன்று தான் அதிகபட்சமாக இருக்கும் ஆனால் விஜயகாந்த் வைக்கப்பட்ட பெயர்கள் பல அது குறித்து விலாவாரியாக போக்குவோம்..
விட்ட குறை தொட்ட குறை.. சிவகார்த்திகேயன் மேல என்ன தப்பு.. இமானுக்கு எதிராக பொங்கிய முன்னாள் மனைவி.!
முதலில் புரட்சிகனல் என பெயர் வைத்தனர் அதன் பிறகு சூப்பர் ஹீரோ, மக்கள் திலகம், புரட்சி திலகம், எழுச்சி கலைஞர், புரட்சி கலைஞர், கேப்டன் என இன்றும் பல பெயர்கள் விஜயகாந்துக்கு வைத்தனர். விஜயகாந்த் நடித்த 25, 50, 75, 100, 125, 150 ஆகிய படங்களின் போஸ்டர்கள் கூட வெளிவந்து வைரல் ஆகின்றன இதோ நீங்களே பாருங்கள்.