Vijayakanth : தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்து அதிக வெற்றி படங்களை கொடுத்து தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த் சினிமாவின் மூலம் தனக்கென ரசிகர்களை மட்டும் உருவாக்கிக் கொள்ளாமல் பல நல்ல மனிதர்களையும் சம்பாதித்தார். இப்படிப்பட்ட விஜயகாந்த் விருதகிரி படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சியை தலைவராக அரியணை ஏறிய விஜயகாந்த் அடுத்து சிஎம் ஆக வரலாம் என பேச்சுக்கள் எழுந்தது ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக சற்று ஓய்வு எடுத்து வந்த நிலையில் கடந்த மாதம் ரொம்ப முடியாததால் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சளி, இரும்பல் என இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம்..
14 நாட்கள் அவர் இன்னும் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் சொன்னதை எடுத்து விஜயகாந்த் ரசிகர்களும், தொண்டர்களும் கோயில்களில் விஜயகாந்த் மீண்டும் உடல் நலம் தேறி வரவேண்டும் என பிரார்த்தனை செய்தார்கள் அதன் பலனாக அவர் கடந்த 11ஆம் தேதி வீட்டில் திரும்பினார்.
வீடு திரும்பிய சில தினங்களிலேயே சென்னை திருவேற்காட்டில் தேதிமுக தலைவர் செயற் குழு மற்றும் பொது குழு கூட்டம் நடைபெற்றது இதில் விஜயகாந்த் வந்திருந்தார். ரசிகர்களும் தொண்டர்களும் அவரைப் பார்த்து எப்படி சிங்கம் போல இருந்தாரு இப்படி இருக்காரு என கண்கலங்கினார் இதை பார்த்த திரை பிரபலங்கள் கூட அவர் ஓய்வு எடுக்க வேண்டும் இப்படி எல்லாம் அவரை கஷ்டப்படுத்தாதீர்கள் என கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் விஜயகாந்தின் நண்பனும், நடிகருமான ராதாரவி சமிபத்திய வீடியோ ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது. அவர் சொன்னது என்னவென்றால்.. அவனை ஏன் அவ்வளவு துன்புறுத்தனுமான்னு இருக்கு, சிங்கம் மாதிரி இருந்தா மனுஷன் அவன் இப்படி பார்க்க முடியல இந்த நேரத்துல அவன தொந்தரவு பண்ணக்கூடாது பார்த்தா ரொம்ப கஷ்டமாயிடும்..
அரசியலுக்கு நேர்மை உகந்த விஷயம் அல்ல அதற்கு உதாரணம் விஜயகாந்த் அவன் அரசியலுக்கு வந்திருக்கக் கூடாது என பேசினார் மேலும் பேசிய அவர் நாங்கள் ஐந்து பேர் நண்பர்கள் விஜயகாந்த், எஸ் எஸ் சந்திரன், வாகை சந்திரசேகர், தியாகு.. இந்த ஐந்து பேரில் விஜயகாந்த் மட்டும் தான் ஹீரோ..
விஜயகாந்த் சாப்பாடு எல்லாம் வாரி வழங்குவார் ராவுத்தர் தான் விஜயகாந்தின் எல்லா விஷயங்களையும் பார்த்துக்கொண்டார். எங்கள் குரூப் விஜயகாந்த் இடமிருந்து திடீரென பிரிந்து விட்டது அது ஏனென்று இன்னும் வரை எனக்கு தெரியவில்லை என் நண்பனை எனக்கு அடையாளம் தெரியலை நேரில் சென்று பார்க்கலாம் என்றால் அவரது குடும்பத்தினர் அனுமதி மறுக்கிறார்கள்.
ஒருமுறை விஜயகாந்தை பார்க்க வேண்டும் என கூறினேன் அதற்கு அவர் மைத்துனர் சதீஷ் விஜயகாந்த் பார்க்க வேண்டுமானால் அவரின் திருமண மண்டபத்திற்கு வாருங்கள் என்று கூறிவிட்டார். அது என் வேலை இல்லை என்று கூறிவிட்டேன் விஜயகாந்த் அரசியலில் மிகவும் நேர்மையானவர் இங்கே நேர்மையாக இருந்தால் வேலைக்காகாது என்று ராதாரவி பேசியுள்ளார்.