எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா உலகில் நுழைவது ரொம்ப கஷ்டம் அப்படியே உள்ளே வந்தாலும் பல அவமானங்களையும் கஷ்டங்களையும் சந்தித்து படிப்படியாக திறமையை வளர்த்து ஒரு கட்டத்தில் பிரபலம் அடைகின்றனர். அந்த வகையில் விஜயகாந்த் முதலில் ரைஸ் மில் வைத்து பின் சினிமா ஆசையினால் நடிக்க வந்தார்.
முதலில் வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறி இறங்கினார் ஒரு கட்டத்தில் வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி வெற்றிகளை குவித்து கேப்டன் என்ற செல்ல பெயரை சம்பாதித்தார் மேலும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோவாகவும் விஸ்வரூபம் எடுத்தார் விஜயகாந்த்.
இவரை போலவே நடிகர் அஜித்தும் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா உலகில் படிப்படியாக தனது திறமையை வெளிக்காட்டி பிரபலமடைந்தார் இப்படி பிரபலமடைந்த இருவரும் ஒரே படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என பலரும் யோசித்தது உண்டு ஆனால் இது இன்று வரை நடந்ததே கிடையாது.
ஆனால் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் அஜித் மற்றும் விஜயகாந்தை வைத்து ஒரு படம் பண்ண திட்டம் போட்டதாம் அது குறித்து தான் நாம் பார்க்க இருக்கிறோம். திரைப்பட கல்லூரியில் படித்த சிலரை வைத்து ஒரு பிரம்மாண்டமான கதையை உருவாக்க அந்த நிறுவனம் திட்ட போட்டதாம்
மேலும் அதில் அஜித் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் எனவும் யோசித்ததாம் ஆனால் அது நடக்காமல் போய்விட்டதாம் இது நடந்திருந்தால் நிச்சயம் அந்த படம் மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக மாறி இருப்பதோடு மட்டுமல்லாமல் அது காலம் கடந்து பேசும் எனவும் பலரும் கூறி வருகின்றனர்.