ஒரே வருடத்தில் 18 திரைப்படங்களில் நடித்த அசத்திய விஜயகாந்த்..! இதோ முழு லிஸ்ட்.

Vijayakanth acted in 18 films in one year
Vijayakanth acted in 18 films in one year

Vijayakanth acted in 18 films in one year : விஜயகாந்த் ஒரே வருடத்தில் 18 திரைப்படங்களில் நடித்துள்ளது தற்பொழுது வைரலாகி வருகிறது.

சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜிக்கு பிறகு முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்தது ரஜினியும் கமலும் தான் ரஜினிக்கும் கமலுக்கும் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது அந்த வகையில் 1979 ஆம் ஆண்டு கமல் ஒரு பக்கம் வெற்றி படங்களை கொடுத்து கொண்டு இருக்க ரஜினி மற்றொரு பக்கம் மாபெரும் ஹிட் திரைப்படங்களை தந்து கொண்டிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் சிவகுமார், சுதாகர், விஜயன், விஜயகுமார், ஜெய்கணேஷ் என பல நடிகர்களின் திரைப்படமும் வந்து கொண்டிருந்தது. மேலும் ரஜினி, கமல் இணைந்து நடித்த திரைப்படமும் வெளியானது அந்த வகையில் அலாவுதீனின் அற்புத விளக்கு நினைத்தாலே இனிக்கும் ஆகிய திரைப்படங்கள் இருவரும் இணைந்து நடித்தார்கள். அதேபோல் கமலுக்கு கல்யாணராமன் மங்கள வாத்தியம் என்றும் ரஜினிகாந்த் ஆறிலிருந்து அறுபது வரை தர்மயுத்தம் என நடித்துக் கொண்டிருந்தார்கள்.

கரிகாலனை கூர் செத்தி விடும் ஜான்சி ராணி.. ஜனனி கம்பெனியில் பூஜை போடும் வில்லன்…

அந்த சமயத்தில் 1979 ஆம் ஆண்டில் அகல்விளக்கு தூரத்து இடி முழக்கம் இனிக்கும் இளமை என தமிழ் திரை உலகில் களமிறங்கினார் விஜயகாந்த் அடுத்தடுத்த வருடங்களில் தான் விஜயகாந்த் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் வெற்றியும் குவிய தொடங்கியது 81 ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகிய சட்டம் ஒரு  இருட்டறை திரைப்படம் மாபெரும் வெற்றியை தந்தது.

பொதுவாக விஜயகாந்த் திரைப்படம் சுமாரான திரைப்படமாக இருந்தாலும் முதலுக்கு மோசம் இல்லாமல் ஓடிக்கொண்டு இருந்தது தயாரிப்பாளர்களும் விஜயகாந்த் க்கு கால் சீட் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள் அந்த வகையில் விஜயகாந்த் ரசிகர்களுக்கு மறக்க முடியாத வருடமாக அமைந்தது 1984. இந்த வருடத்தில் மட்டும் 18 திரைப்படங்களில் நடித்தார் விஜயகாந்த்.

என் அண்ணன் என்னை விட்டு போயிட்டாரு.. நேரில் சென்று ஐஸ் பெட்டியில் இருக்கும் விஜயகாந்தை பார்த்து கதறி கதறி அழுத விஜய்..!

அந்த வகையில் குழந்தை இயேசு என்னும் படத்தில் நடித்தார், ராம நாராயண இயக்கத்தில் சபாஷ், தீர்ப்பு என் கையில், நாளை உனது நாள், நூறாவது நாள் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் மதுரை சூரன், மெட்ராஸ் வாத்தியார், வீட்டுக்கு ஒரு கண்ணகி, வெள்ளை புறா ஒன்று, வெற்றி, வேங்கையின் மைந்தன், வைதேகி காத்திருந்தாள், குடும்பம் சத்தியம் நீயே ,மாமன் மச்சான், என அந்த வருடத்தில் மொத்தம் 18 திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தார்.

அதேபோல் இந்த 18 திரைப்படங்களும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுக்கவில்லை இது திரைப்படத்தை தொடர்ந்து விஜயகாந்த் இன்னும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க ஆரம்பித்தார்..