vijayakanth 5 best villain role character : ஹீரோவாக நடித்த விஜயகாந்த் தான் பலருக்கு தெரியும் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் விஜயகாந்த் வில்லனாக நடித்துள்ளார் அதன் பிறகு தான் ஹீரோவாக ஜொலித்தார். எப்படியாவது விஜயகாந்த் மார்க்கெட்டை காலி செய்ய வேண்டும் என வில்லன் கதாபாத்திரம் கொடுத்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டார்கள்.
அந்த வகையில் விஜயகாந்தின் கேரியரைக் கெடுப்பதற்காக அவரை வில்லனாக காட்டி ஐந்து திரைப்படங்கள்.
இனிக்கும் இளமை: சுற்றுலாவுக்காக சென்ற விஜயகாந்த் குற்றாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அநீதியை தட்டிக் கேட்க அவரை எதார்த்தமாக பார்த்த இயக்குனர் எம் ஏ காஜா பேசி உள்ளார் அப்பொழுது அந்த இயக்குனர் விஜயகாந்த் இடம் தன்னுடைய முகவரியை கொடுத்துவிட்டு தன்னை வந்து பார்க்கும்படி கூறினார் அப்படித்தான் விஜயகாந்தின் திரைப்பயணம் தொடங்கியது.
போலீசாக மிரட்டி விட்ட விஜயகாந்த்.. எத்தனை திரைப்படத்தில் போலீஸ் கெட்டப் தெரியுமா..?
இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் விஜயகாந்த் திரை பயணம் தொடங்கியது இந்த திரைப்படத்தில் சுதாகர் மற்றும் ராதிகா இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் ஆனால் விஜயகாந்த் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார். வணிகரீதியாக இந்த திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்தது அதனால் விஜயகாந்தின் காட்சிகள் மக்கள் மத்தியில் ரீச் ஆனது.
நூல் அருந்த பட்டம்: 1981 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் நூல் அருந்த பட்டம் இந்தத் திரைப்படத்தில் விஜயகாந்த் பிளேபாய் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.பெண்ணை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளாமல் தவிக்க விடுவார் இந்தத் திரைப்படம் தான் விஜயகாந்த்தை தூக்கிவிட்டு திரைப்படம் என்று கூட கூறலாம். படத்தின் கடைசியில் மனம் திருந்தி நடந்து கொண்டதுக்கு வருத்தப்படுவார் இதுதான் இந்த திரைப்படத்தின் கிளைமேக்ஸ்.
ஓம் சக்தி: எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் தான் ஓம் சக்தி இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் மேகனா நடித்திருந்தார்கள். ஆனால் இந்த திரைப்படம் விஜயகாந்த் க்கு பெரிதாக பெயர் பெற்றுக் கொடுக்கவில்லை இந்த திரைப்படத்தின் மூலம் விஜயகாந்த் மார்க்கெட் சரியா தொடங்கியது.
நடிகர் திகலம் சிவாஜியால் முடியாததை செய்து காட்டிய விஜயகாந்த்.. கருப்பு எம்ஜிஆர் – னா சும்மாவா.?
பார்வையின் மறுபக்கம்: பாலகிருஷ்ணா இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் தான் பார்வையின் மறுபக்கம் இந்த திரைப்படம் 1982 ஆம் ஆண்டு வெளியாகியது மேலும் இது திரைப்படத்தில் நம்பியார், ஸ்ரீபிரியா சிவசந்திரன் சில்க்ஸ்மிதா ஆகியோர்கள் இணைந்து நடித்திருந்தார்கள் அதேபோல் பார்த்திபன், ரோகிணி ஆகியோரும் துணை வேடத்தில் நடித்திருந்தார்கள். வளரும் நடிகராக இருந்த விஜயகாந்த் மார்க்கெட்டை காலி செய்யும் விதமாக வில்லன் கலந்த கதாபாத்திரமாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது.
ராமன் ஸ்ரீராமன்: 1985 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் ராமன் ஸ்ரீராமன் இந்த திரைப்படத்தில் பல கொலைகள் நிகழும் சம்பவமாக இருக்கும் இதில் விஜயகாந்த்திற்க்கும் கொலைக்கும் சம்பந்தம் இருக்கிறதா இல்லையா என்பது கடைசி வரை சஸ்பென்ஸ் ஆக இருக்கும் உண்மையான கொலைகாரர் விஜயகாந்த் தானா இல்ல பாசாங்கு செய்கிறாரா என்ற தவறான கண்ணோட்டத்திலேயே விஜயகாந்தை காட்டிய திரைப்படம்.
விஜயகாந்த் vs ராமராஜன் : 25 முறை நேருக்கு நேர் மோதியதில் ஜெயித்தது யார் தெரியுமா.?
இப்படி விஜயகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் மார்க்கெட் சரியும் அளவிற்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.