கிச்சனில் வைத்து மீனாவை மிரட்டும் விஜயா, ரோஹினி… சந்திராவை மாணவரியாக அசிங்கப்படுத்தும் விஜயா..

siragadikka aasai may 16 epsode
siragadikka aasai may 16 epsode

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து திருமண நாளை மறந்து விடுகிறார் அதனால் மீனா கோபப்படுகிறார் ஒரு வழியாக எப்படியோ சமாளித்து முத்து மீனாவை சந்தோஷப்படுத்துகிறார் அதாவது நீ தாலி வாங்கிக்கொண்டு கட்ட சொன்னது தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது உன்னை முதன்முதலாக பார்த்த நாள் எனக்கு ஞாபகம் இருக்கிறது என சொல்லி சமாளிக்கிறார் அதற்கு எப்பொழுது என்ன முதன் முதலில் பார்த்தீர்கள் என கேட்க உன்ன பார்லரில் அழைத்து செல்லும் பொழுது தான் பார்த்தேன் என கூறுகிறார் முத்து.

அதற்கு மீனா இதுதான் நீங்க ஞாபகம் வச்சுகிட்ட லட்சணமா உங்கள முதல் முதலாகா சண்டை போடும்போது தான் பார்த்தேன் மார்க்கெட்ல நீங்க சண்டை போட்டுட்டு இருந்தீங்க ஏன் பூவெல்லாம் தூக்கி பந்தாடி பறக்க விட்டீங்க என பேசுகிறார் இப்படியே இருவரும் பேசிக் கொண்டிருக்க ஒரு வழியாக சமாதானம் ஆகிறார்கள். அண்ணாமலை இடம் மீனா காபி கொண்டு கொடுக்க அப்பொழுது அவன் பேசினதை எதையும் மனசுல வச்சுக்காத அவன் மறந்து இருப்பான் என அண்ணாமலை கூறுகிறார் அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல மாமா என மீனா கூறுகிறார்.

மீனாவின் அம்மா சந்திரா வீட்டிற்கு வருகிறார் அவர் சீர்வரிசை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். அப்பொழுதுரோகிணி வரும்பொழுது சந்திரா உங்க அப்பா ஜெயலில் இருக்கிறார் இல்ல அதற்கு சிறை மீட்டர் விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வா என கூறுகிறார் இவர் எதார்த்தமாக தான் மீனாவின் அம்மா கூறுகிறார் ஆனால் அதற்கு விஜயாவும் ரோகினியும் மிகவும் கோபப்படுகிறார்கள். விஜயா நீங்களும் ரோகிணி குடும்பமும் ஒண்ணா நீங்களும் ஸ்ருதி குடும்பமும் ஒண்ணா என சந்திராவை மிகவும் அசிங்கப்படுத்துகிறார்.

ஆனால் முத்து சீர்வரிசை எடுத்துக் கொண்டு வந்ததை பார்த்து ஒரே குடும்பத்தில் எதற்கு அத்த சீர்வரிசை என பேசுகிறார் அதுமட்டுமில்லாமல் நான் உங்களை அம்மாவாக தான் பார்க்கிறேன் என கூற விஜயாவின் முகம் மாறுகிறது. முத்து வெளியே சென்றவுடன் மீண்டும் விஜயா தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் அப்பொழுது மீனா தன்னுடைய அம்மா இங்கே இருந்தால் இவர்கள் அசிங்கப்படுத்துவார்கள் என நினைத்துக் கொண்டு உடனடியாக வெளியே அனுப்ப முயற்சி செய்கிறார் ஆனால் அதற்கு முன் சுருதி விஜயாவுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

மீனாவின் அம்மா வந்ததும் நீங்க முன்னாடி கொண்டு வந்த முறுக்கு எடுத்து வந்தீங்களா அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என கேட்கிறார் அதற்கு விஜயா அது என்ன எண்ணெயில செஞ்சதுன்னு தெரியல நீ சாப்பிடாதம்மா உனக்கு உடம்புக்கு ஒத்துக்காது என கூற அதற்கு மீனாவின் அம்மா நல்ல சுத்தமான எண்ணெயில் செஞ்சது தான் எனக் கூறுகிறார் அதற்கு ஸ்ருதி உடனே எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது நான் சாப்பிட போகிறேன் என சாப்பிடுகிறார் அதே போல் ரவிக்கும் கொடுக்கிறார்.

ஸ்ருதியின் செயல் விஜயாவின் மூஞ்சியில் அடித்தது போல் இருக்கிறது உடனே அனைவரும் விஜயாவின் முகத்தை பார்க்கிறார்கள். மீனா தன்னுடைய அம்மாவை அனுப்பி வைத்துவிட்டு கிச்சனுக்கு செல்ல கிச்சனுக்கு சென்ற விஜயா மற்றும் ரோகிணி நம்ம குடும்பத்தை பத்தி உங்க வீட்ல போயி வத்தி வைக்கிறியா உன் குடும்பத்தை மட்டும் பத்தி பேசு தேவையில்லாம இங்க நடக்கிறத பத்தி அங்க போய் பேசாத என விஜயா மீனாவை வெளுத்து வாங்குகிறார் பத்தாததற்கு ரோகிணியும் எங்க அப்பா பத்தி பேச நீ யார் என்பது போல் கேட்டு விடுகிறார்.

அது மட்டும் இல்லாம உங்க அம்மா எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ற அளவுக்கு நீங்க ஒன்னும் பெரிய ஆளு இல்லை என்பது போல் அவர் பேச அதற்கு அவங்க ஒரு அக்கறைல தான் சொன்னாங்க என மீனா பேசுகிறார். அடுத்த காட்சியில் முத்து மற்றும் மீனா இருவரும் ரூமில் சந்திரா எடுத்து வந்த சட்டையை பார்த்து பேசிக்கொண்டிருக்க விஜயா ஏதாவது மீனா புருஷனிடம் வத்தி வைத்து சண்டை மூட்டி விடுவாளா என ஒட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் மீனா அதைப்பற்றி பேசாமல் நாளைக்கு வீட்டுக்கு போகும்போது இந்த சட்டையை போட்டுக் கொண்டு போகலாம் என பேசிக் கொண்டிருக்கிறார் வீட்டுக்கு வர முடியாது என முதலில் முத்து மறுக்க பிறகு முத்து வருகிறேன் என சம்மதம் தெரிவிக்கிறார்.

மீனா விஜயாவை பார்த்து எனக்கு குடும்ப அமைதி முக்கியம் அதனால என் வீட்டுகாரர்கிட்ட சொல்லமாட்டேன் என மீனா கூறுகிறார். அடுத்த காட்சியில் அடுத்த நாள் சட்டையை போட்டுக் கொண்டு அண்ணாமலை மற்றும் விஜயாவை முத்து அழைக்கிறார் அதற்குள் அவரின் பாட்டி வருகிறார் அப்பொழுது முத்துப் பாட்டியை தூக்கிக் கொண்டு சுற்றுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.