உருகி உருகி காதல் கடிதம் எழுதிய விஜய்.! அப்பொழுது தெரியுமா இதோ அவரே கூறிய சுவாரஸ்யமான தகவல்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் பொழுது தளபதி விஜய் சைக்கிளில் வந்து மரண மாஸ் கொடுத்தார்.  அதோடு வீட்டிற்கு செல்லும் பொழுது தனது ரசிகருடன் வண்டியில் சென்றார். அந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில்  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் தளபதி விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கவுள்ள தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் சில நாட்களாக நடைபெற்று வருகிறது அது குறித்த புகைப்படங்களை இணையதளத்தில் வைரலானது.

இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு,டிக் டாக் பிரபலம் அபர்ணா தாஸ் உட்பட இன்னும் பல பிரபலங்கள் இணைந்து திரைப்படத்தில் நடிக்க உள்ளார்கள்.

இந்நிலையில் தற்பொழுது தளபதி விஜய் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளார். இந்நிலையில் தளபதி விஜய் பேட்டி அளித்த பழைய வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில் விஜய் எட்டாவது 8 படிக்கும் போழுதும் மற்றும் 12வது படிக்கும் பொழுதும் காதல் கடிதம் எழுதி உள்ளேன் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.  இதோ அந்த வீடியோ.