ஜவான் படக்குழுவுடன் இணைந்த “தளபதி விஜய்” – வெளியே கசிந்த புகைப்படம்.!

jawan-movie
jawan-movie

ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவில் அதிக ஹிட் படங்களை கொடுத்த நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் இவர் அண்மை காலமாக வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்தி வருகிறார். இப்பொழுது கூட தளபதி விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு பேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படம் ஆக உருவாகுவதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்டப்படபிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கசிவது படக்குழுவையும், நடிகர் விஜயையும் ரொம்பவும் பாதித்துள்ளது.

இது இப்படி இருக்க தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் தளபதி விஜய் ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறார் என சொல்லப்பட்டது தற்பொழுது அது உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது.

ஜவான் படக்குழு தற்பொழுது சென்னை வந்து உள்ளது. விஜய்யும் இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடிக்க படக்குழுவை சந்தித்துள்ளார் அப்பொழுது ஷாருக்கானும் – விஜய்யும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் பாலிவுட் கிங் காங் நடிகர் ஷாருக்கான் மற்றும் தளபதி விஜய் அமர்ந்திருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை..

sharukhan and vijay
sharukhan and vijay
sharukhan
sharukhan