நடிகர் விஜய் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் இப்பொழுது கூட தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 66-வது திரைப்படமான வாரிசு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தளபதி விஜய் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வெற்றி கண்டுள்ளார் ஆனால் ஒரே ஒரு இசையமைப்பாளர் உடன் கைகோர்த்து பணியாற்றவே இல்லை என்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கிறது.
அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல இசைஞானியின் மகன் யுவன் சங்கர் ராஜாவுடன் தளபதி விஜய் இதுவரை பணியாற்றியதே கிடையாதாம். ஆனால் புதிய கீதை திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார் அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை யுவன் சங்கர் ராஜா விஜய்யின் படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என ஆசை தெரிவித்தார்.
இதனை விஜய்யும் உணர்ந்திருந்தாலும் இருவரும் இதுவரை இணைந்ததில்லை காரணம் யுவன் சங்கர் ராஜா என்றால் அஜித்துடன் தான் இணைவார் என்ற நிலைமை தான் தற்போது சினிமா உலகில் பேசப்பட்டு வருகிறது. யுவன் சங்கர் ராஜா தன்னுடைய பேவரட் ஹீரோ அஜித் என பல மேடைகளில் கூறியுள்ளார் மேலும் அஜித்தும் இவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் வெற்றி படங்களே அதன் தீம் மியூசிக் பாடல் என அனைத்தும் வெற்றியை ருசித்துள்ளது.
இதனால் ரசிகர்களே அஜித்துக்கு ரொம்பவும் பொருத்தமான இசையமைப்பாளர் யுவன் தான் என பலரும் கூறுகின்றனர் அதன் காரணமாகவோ என்னவோ.. இதனால் என்னவோ விஜய் யுவன் சங்கர் ராஜா உடன் இணைந்து பணியாற்றவே இல்லை.. யுவனுக்குப் பின்னால் வந்த அனிருத்துடன் நெருக்கம் காட்டி வருகிறார் விஜய். தற்பொழுது அனிருத் தான் அதிகம் விஜய் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.