400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படத்தில் 150 கோடி சம்பளம் வாங்கும் விஜய்.! இயக்குனர் யார் தெரியுமா.? பரபரப்பை கிளப்பும் தகவல்

thalapathy-68
thalapathy-68

தளபதி 67 குறித்தே இன்னம் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை அதற்குள் தளபதி 68 குறித்து சமூக வலைதளத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. நடிகர் விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனரான வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இந்த படம் முடிந்தவுடன் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.

மேலும் தளபதி 67 திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்ட நிலையில் தளபதி 67 குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவராமல் இருந்து வருகிறது இந்த நிலையில் தளபதி 68 திரைப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது.

அதாவது தளபதி 68 திரைப்படத்தை இயக்குனர் அட்லி அவர்கள் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜையுடன் இணைந்து பிகில், மெர்சல், தெரி, ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தளபதி 68 திரைப்படத்திலும் நான்காவது முறையாக அட்லியும் விஜயும் இணைய இருக்கிறார்.

தற்போது அட்லி அவர்கள் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து தளபதி 68 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படம் ரூ400 கோடி பட்ஜெட்டில் எடுக்க போவதற்காக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜயின் திரை வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக தளபதி 68 திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தளபதி 68 திரைப்படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ150 கோடி வரை சம்பளம் வாங்க உள்ளதாகவும், இயக்குனர் அட்லிக்கு ரூ50 கோடி ரூபாய் சம்பளம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.