அஜித் அன்று சொன்னதை 12 வருடம் கழித்து நிறைவேற்றும் விஜய்.? தளபதி 68 கூட்டணிக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா

Ajith
Ajith

Vijay and Ajith : நடிகர் விஜய் “லியோ” படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் தளபதி 68 படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார். இந்த நிலையில் தளபதி 68 கூட்டணி உருவாக முக்கிய காரணமே அஜித்தான் என கூறப்படுகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் மோகன் ராஜா இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து பேசி உள்ளார். விஜயின் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான வேலாயுதம் படம் சமயத்தில் தான் அஜித் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் மங்காத்தா படம் உருவாகி இருந்தது.

அந்த சமயத்தில் இரு படங்களுக்குமே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது விஜயும், அஜித்தும் ஷூட்டிங் சமயத்தில் சந்தித்துக்கொண்டனர் அஜித்திற்கு விஜய் வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்தார் அதை அணிந்து கொண்டு அஜித் மங்காத்தாவில் நடித்த காட்சிகள் எல்லாமே செம ஹிட் கொடுத்தது இருதரப்பு ரசிகர்களுமே இதை கொண்டாடினர்.

ஆனால் மங்காத்தா படம் பெரிய ஹிட் படமாக அமைந்தது வேலாயுதம் படம் வசூலில் சுமார் தான் என்றாலும் விமர்சன ரீதியாக ஓகே லெவலில் தான் இருந்தது ஆனால் அஜித்தும், விஜயும் இந்த பங்களின் சூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்ற போது ஒரே விமானத்தில் சென்றனர் அப்பொழுது இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

Ajith
Ajith

சிறிது நேரம் கழித்து ராஜாவிடம் இது குறித்து பேசிய விஜய் என் டைரக்டர் வெங்கட் பிரபுவை நீங்கள் யூஸ் பண்ணுங்க என்றார். நானும் உன்னை என் டைரக்டர்னு பெருமையா சொல்லிக்கணும்யா படம் அப்படி வரணும் என எனக்கு ஊக்கம் கொடுத்தார் என தெரிவித்தார் கடைசியில் அஜித்தின் வாக்கு பலித்து விட்டது தற்போது தளபதி 68 படத்தில் வெங்கட் பிரபு விஜய்யும் இணைந்துள்ளனர்.