தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வளம் வருபவர் தளபதி விஜய் இவரது ஒவ்வொரு படமும் ஹிட் அடிக்கும் போது அதற்கு ஏற்றார் போல.. தனது சம்பளத்தையும் உயர்த்தி வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார் நடிகர் விஜய் இப்பொழுது தனது 61வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.
இந்த படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு திட்டவட்டமாக சொல்லி உள்ளதை அடுத்து படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் மிகப் பிரமாண்ட பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கிறார்.
இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, பிரபு, ஸ்ரீகாந்த், சங்கீதா, எஸ்.ஜே. சூர்யா, சம்யுக்தா மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்கொண்டு இருகின்றன.
மறுபக்கம் இந்த படத்தின் ஷூட்டிங்கிலிருந்து பல்வேறு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் லீக்காகி கொண்டே போவது பட குழு மற்றும் விஜயையும் ரொம்ப அப்செட் ஆக்கி உள்ளது. இருந்தாலும் வாரிசு படக்குழு அடுத்தடுத்து அப்டேட்களை கொடுக்க ரெடியாக இருக்கிறது. முதல் பாடல் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் விஜயின் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து விஜய் சண்டை போடும் காட்சிகள் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதில் விஜய் கூட செம்ம ஸ்மார்ட்டாக போஸ் கொடுத்து நிற்கிறார். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை.. புகைப்படத்தை பார்த்த படக்குழு செம்ம அப்செட்டில் இருக்கிறதாம்.