தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவரையும் கவர்ந்திருக்கும் நிலையில் பலருக்கும் பிடித்த நடிகராக விஜய் இருந்து வருகிறார். அப்படி தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஏராளமான மாநிலங்களில் விஜய்க்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஏராளமான தொழில்களை செய்து வரும் விஜய் குறிப்பாக தாயார் ஷோபா, மகன் சஞ்சய், மனைவி சங்கீதா ஆகியோர்களின் பெயரில் பல திருமணம் மண்டபங்களை நிர்வகித்து வருகிறார். மேலும் இது மட்டுமல்லாமல் பல ஊர்களில் பல தொழில்களை செய்து வரும் நிலையில் இவருக்கு பிடித்தமான தொழிலில் திருமண மண்டபம் சென்னையில் சாலிகிராமத்தில் சோபா திருமண மண்டபம், வடபழனியில் ஒரு திருமண மண்டபம் இதனை அடுத்து பேரூரில் சங்கீதா திருமணம் மண்டபம் என்று தனது மனைவியின் பெயரில் நடித்து வருகிறார். மேலும் இதனை தொடர்ந்து புதுக்கோட்டை உள்ளிட்ட இன்னும் சில மாவட்டங்களிலும் திருமண மண்டபத்தை நடத்தி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் மிக்ஸி, கிரைண்டர் வைத்து சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடியதற்கு விஜயின் கல்யாண மண்டபங்கள் சென்னையில் அவரது சொத்துக்களை சட்ட ரீதியான ஆராய்ச்சிக்கு உட்பட ஆரம்பித்துள்ளது. அதிமுக அரசு படங்களில் நீதி நேர்மை குறித்து ஆவேசமாக வசனம் பேசும் விஜய் உண்மை வாழ்க்கையில் நேர்மையாற்றவர் படங்களுக்கு வாங்கும் சம்பளங்களில் முக்கால்வாசியை கருப்பு பணமாக தான் வாங்குகிறார் என அதிமுக அமைச்சர்கள் கூறுகிறார்கள்.
இதனை அடுத்து முதல் சிக்கலுக்கு ஆளாகி இருப்பவை விஜயின் திருமண மண்டபங்கள் தான் விஜய் வெளிப்படையாக சென்னை வடபழனியில் குமரன் காலனி அருணாச்சலம் சாலை மற்றும் போரூர் பகுதிகளில் மூன்று திருமண மண்டபங்கள் வைத்துள்ளார். இவற்றிற்கு முறையான பத்திரப்பதிவுகள் உள்ளதா மாநகராட்சியில் வருமான வரி கட்டப்பட்டுள்ளதா வேற என்ன விளக்கங்கள் உள்ளனவா என்று திருமண மண்டபங்களுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள திருமண மண்டபத்தை தயாரிப்பாளர் லலித்திடம் மாத வாடகை எட்டு லட்சத்திற்கு 15 வருட ஒப்பந்த அடிப்படையில் வாடகை கொடுத்துள்ளார். இப்பொழுது அந்த திருமண மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு மாத வாடகை 12 லட்சத்திற்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் முதற்கட்ட போரூரில் இருக்கும் சங்கீதா திருமண மண்டபம் தற்பொழுது ரிலையன்ஸ் ட்ரென்ஸாக மாறி இருக்கிறது இன்னும் சில மண்டபங்களும் அதேபோல சூப்பர் மார்க்கெட் வைப்பதற்கு விஜய் யோசித்து வருகிறாராம் மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் இருந்து வரும் நிலையில் அவருடைய சம்பளம் 120 கோடியாகும் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே வெளியாகி வருகிறது. இதனை அடுத்து விரைவில் இவர் அரசியலில் இணைவும் வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.