அஜித்துக்காக உருவாக்கப்பட்ட கதையில் நடித்து வெற்றிபெற்ற விஜய் – உண்மையை சொல்லும் இயக்குனர்.!

ajith-and-vijay
ajith-and-vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் அஜித் – விஜய். இவர்கள் இருவருமே நம்பர் ஒன் இடத்தை பிடிக்க போட்டி போட்டு கொண்டு நடித்து வருகின்றனர் அந்த வகையில் இருவருமே வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இப்பொழுது நடிகர் அஜித் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61-வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அதேபோல நடிகர் விஜய்யும் தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இருவருமே சினிமா உலகில் அண்மை காலமாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அசத்தி வருகின்றனர்.

இருப்பினும் ஆரம்ப காலகட்டத்தில் இவர்கள் வெற்றிக்காக ஏங்கியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல விஜய்க்காக  உருவாக்கப்பட்ட கதையில் அஜித் நடிப்பதும் அஜித்திற்காக வந்த கதையில் விஜய் நடிப்பது போன்று சினிமா உலகில் பல குளறுபடிகள் நடந்திருக்கிறது. அதேபோல் நடந்த நிகழ்வு ஒன்று பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.

ரமணா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் திருமலை இந்த படம் அப்பொழுது விஜய்க்கு மிக முக்கியமான படமாக இருந்தது ஆனால் உண்மையிலேயே இந்த படம் விஜய்கானா படமே கிடையாது இயக்குனர் ரமணா இந்த படத்தின் கதையை எழுதும் போது அஜித்தை வைத்துதான் படம் பண்ண வேண்டும் என முடிவு செய்தார்.

ஆனால் அஜித்தை பார்த்து கதையை கூற முடியாமல் போனதால் ஒரு கட்டத்தில் விஜய்யிடம்  கதையை சொல்லி கமிட் ஆனார். படம் வெளிவந்து பட்டையை கிளப்பியதும் ஒரு தடவை அஜித்தை சந்திக்கும் பொழுது விஜய் நடித்த திருமலை படம் உங்களுக்கான திரைப்படம் என அப்பொழுது கூறினாராம். ஆனால் அஜித் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் போய்விட்டார் என சொல்லப்படுகிறது.