தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் தற்பொழுது தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் அவருடன் இணைந்து ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது அதனைத் தொடர்ந்து லோகேஷன் கனகராஜ் உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து தனது 67-வது திரைப்படத்திலும் விஜய் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் உடன் நெருங்கிய நட்பில் இருந்தவர்.
அவரின் பிஆர்ஓ பி.டி. சிவகுமார் விஜய் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. விஜய் மிகவும் வருத்தப்பட்ட நேரமும்.. மிகவும் சந்தோஷப்பட்ட நேரமும்.. குறிப்பு அவர் பகிர்ந்து உள்ளார் அதாவது பூவே உனக்காக போன்ற படங்களில் நடித்தார்.
ஆதன் பின் கில்லி, திருப்பாச்சி போன்ற படங்களில் ஆக்சன் ஹீரோவாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அந்த நேரங்களில் சொல்ல முடியாத அளவில் சந்தோஷமாக இருந்தாராம் விஜய் ஏனெனில் அந்த சமயம் தான் ரசிகர்கள் அவரை ஒரு முழு ஹீரோவாக ஏற்றுக் கொண்ட படங்கள்.. அதை அடுத்து தலைவா, காவலன் போன்ற படங்களால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
ஏனெனில் அந்த படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது நல்ல படங்கள் வேற… இதை எண்ணி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார் மேலும் இந்த பிரச்சனை இருக்கிறது என யாரிடமும் போய் நிற்க மாட்டார் இதை தீர்த்து வையுங்கள் என்று யாரிடமும் போய் கேட்க மாட்டார் அதனால் மிகவும் வருத்தத்திற்கு ஆளானாராம்.