தளபதி விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோவாக இருக்கிறார். இவர் கடைசியாக நடித்த பீஸ்ட் படம் சுமாரான படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இப்பொழுது தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி வாரிசு படத்தை இயக்குகிறார் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்தகட்ட படபிடிப்பை நோக்கி படக்குழு நகர்ந்து கொண்டு இருக்கிறது. வாரிசு படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, குஷ்பூ, ஷாம் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என படகுழு திட்டவட்டமாக சொல்லி உள்ளதை அடுத்து படபிடிப்பை விரைவாக முடிக்க உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது அதாவது நடிகர் விஜய்க்கு வம்சியை ரொம்ப பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது வாரிசு படப்பிடிப்பில் இயக்குனர் வம்சி கேமராவை..
எந்த இடத்தில் வைத்து எடுத்தால் நன்றாக இருக்கும் எப்படிப்பட்ட காட்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும் என திட்டமிட்டு ஒவ்வொரு காட்சியையும் அருமையாக எடுத்து வருகிறாராம். வம்சி செய்யும் வேலை விஜய்க்கு ரொம்ப பிடித்து போய் உள்ளதால் கேரவன் பக்கம் கூட போகாமல் தளபதி விஜய் படப்பிடிப்பு தளத்தில் உட்கார்ந்து வம்சி செய்யும் வேலையை பார்த்து பார்த்து ரசிக்கிறாராம்.
சொல்ல வேண்டும் என்றால் விஜய் பணியாற்றிய இயக்குனர்களிலேயே சற்று வித்தியாசமானவராக வம்சி இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படம் மிகப்பெரிய ஒரு ஹிட் படமாக மாறும் பட்சத்தில் தளபதி விஜய் மீண்டும் வம்சியுடன் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.