தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய் இவர் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சிவுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து நடித்துவரும் திரைப்படம் வாரிசு.. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப செண்டிமெண்ட் கதையாக உருவாகி வந்தாலும்..
இந்த படத்தில் ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்து இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர். மற்றும் படத்தில் நடித்து வரும் சரத்குமாரும் ஏற்கனவே சொல்லி உள்ளனர் இது இப்படி இருக்க படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் குஷ்பூ, ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், சரத்குமார் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பதால் இந்த படம் அனைத்து இடங்களிலும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நிச்சயம் இந்த திரைப்படம் மிகப் பிரமாண்டமான ஒரு வசூலை அதிக வாய்ப்புகள் இருப்பதாக இப்பொழுது பேசப்பட்டு வருகிறது
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் இருந்து இதுவரை பஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளிவந்துள்ளது இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட்டுகள் கிடைக்குமா என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் இயக்குனர் வம்சிக்கு உடல் நிலை பாதிப்பால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறதாம்..
இடையில் வாரிசுகள் திரைப்படத்தை பார்த்துவிட்டு விஜய் நன்றாக இருப்பதாக சொல்லி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது மேலும் வாரிசு படத்திற்கு விஜய் கொடுத்த தேதிக்கு மேல் போய்விட்டதாம் இன்னும் இறுதி கட்டியும் தொடங்காமல் இருப்பதால் இயக்குனர் வம்சின் மீது சற்று வருத்தத்தில் இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.