Actor Vijay said about Rajinikanth :தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனைவரும் ரஜினிகாந்த அடுத்தடுத்து படங்களில் நடிப்பதை விட அரசியலுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என அவரது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
சமீபத்தில் அரசியல் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டிஎம்எஸ் ஸ்பிச்சை ஒன்றை கொடுத்திருந்தார். அரசியல் வருகையை ஒருபக்கம் மக்கள் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் இருப்பினும் மற்ற அரசியல்வாதிகள் இவரை கேள்விகள் மூலம் தாக்கி வருகின்றனர் அதற்கு எதற்கும் பதில் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் வருடங்களுக்கு முன்னரே ரஜினியின் அரசியல் வருகை பற்றி கூறியிருந்தார். அவர் கூறியது எனக்கு ஒரு நடிகராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பிடிக்கும், அவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என கருத்தை கூறியுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வருவார் என விஜய் கூறியுள்ளார். ஆனால் இன்னும் சில வருடங்களில் விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவார் என நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். தற்போது விஜய்யும் அரசியல் ஆரம்பிக்க வேண்டிய சூழலில் உள்ளார் என கூறி வருகின்றனர்.