Vijay : தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் லிங்குசாமி. முதலில் “ஆனந்தம்” திரைப்படத்தை எடுத்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் எடுத்த ரன் படம் மிகப்பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். பையா, சண்டக்கோழி என வெற்றி படங்களை கொடுத்து வந்த லிங்குசாமி..
கடைசியாக எடுத்த சண்டக்கோழி2 , அஞ்சான் போன்ற படங்கள் சரியாக ஓடாததால் தெலுங்கு பக்கம் தாவினார் அங்கு வாரியார் படத்தை எடுத்தார் அந்த படமும் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை அதனால் இப்போது ஒரு வெற்றி படத்தை கொடுத்து மீண்டு வர முயற்சிக்காட்ட வருகிறார் அந்த வகையில் ரன் 2 படத்தை இவர் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன.
விஜயாவை எதிர்த்து பேசிய மீனா.. பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கே -சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்
இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி சண்டக்கோழி படம் குறித்து பேசி உள்ளார் முதலில் நடிகர் விஜய் சந்தித்து கதையை விவாதித்து கொண்டிருந்தேன். கதையை சரியாக கேட்டு வந்த விஜய் ராஜ்கிரன் கதைக்குள் நுழைய போகிறேன் என்று சொன்னவுடன் அவர் கதை சொல்வதை நிறுத்தங்கள் என்று சொல்லிவிட்டார். ஏன் என்று கேட்ட ராஜ்கிரண் சார் வந்த பின்னர் அதற்கு மேல் நான் அங்கு என்ன செய்யப் போகிறேன் என்று கேட்டார்.
ஆனால் நான் அவரை சமாதானம் செய்து 10 நிமிடம் இரண்டாம் பாதியை கேளுங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்று சொன்னேன் ஆனால் விஜய் முடியவே முடியாது என சொல்லிவிட்டார் இந்த கதையில் நான் நடிக்கவில்லை என சொல்லிவிட்டார் பிறகு ராஜ்கிரண் என்ட்ரிக்கு பிறகு அவர் கதை கேட்கவே இல்லை விஷால் வைத்து பிறகு எடுத்து இருந்தோம் படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக லீ மெரிடியன் ஹோட்டலில் வெற்றி விழா நடத்தினோம்..
அங்கு விஜய் வந்திருந்தார் என்னை பார்த்து நேராக வந்து படம் பார்த்தேன் சூப்பராக இருந்தது என்றார் நான் அவர் மீது அப்பொழுது கோபத்தில் இருந்தேன். காரணம் அந்த இரண்டாம் பாதி கதையை அவர் கேட்கவில்லை நான் அவரிடம் நீங்கள் தான் இரண்டாம் பாதியை கேட்கவே இல்லையே என்றேன். அதற்கு அவரோ அட விடுங்க இது தான் கரெக்ட் இப்படி ஒருத்தர் வரணும்னு இருந்திருக்கு என சொன்னதாக லிங்குசாமி குறிப்பிட்டார்.
இதற்கு முன்னும் ஒரு நேர்காணலில் இந்த படத்தின் கதையை விஜய் முழுமையாக கேட்காததால் அவர் மீது கோபம் இருந்ததாகவும் ஆனால் அவரே தன்னிடம் வந்து படம் குறித்தும் விஷால் குறித்தும் பாராட்டியது அவர் மீதான இருந்த கோபம் மரியாதையாக மாறியது என கூறினார். சண்டக்கோழி முன்பாக ரன் படத்தையும் விஜய் நிராகரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.