சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களிடம் கதை சொல்லவே இயக்குனர்கள் அதிகம் ஆசைப்படுவது வழக்கம் ஆனால் எல்லா கதைகளையும் ஒரே நடிகர் தேர்ந்தெடுத்த நடிப்பதும் கிடையாது ஒரு சில நல்ல கதைகளையும் நழுவ விடுவது வழக்கம் அந்த வகையில் அஜித், விஜய் போன்றவர்கள் நல்ல கதைகளை சில காரணகளால் நழுவ விட்டுள்ளனர்.
அந்த வகையில் தற்பொழுது தளபதி விஜய் ஒரு சூப்பர் ஹிட் கதையை நழுவ விட்டிருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருபவர் இயக்குனர் மகிழ் திருமேனி. இவர் தளபதி விஜய்க்கு ஒரு சூப்பரான கேங்ஸ்டர் கதையை சொல்லி இருக்கிறார்.
இந்த கதை அவருக்கு பிடித்திருந்தால் உடனே பண்ணலாம்.. என கூறினார் ஆனால் இயக்குனர் மகிழ் திருமேனி. அந்த சமயத்தில் உதயநிதியை வைத்து கலகத் தலைவன் என்னும் படத்தை எடுத்து வந்ததால் அப்பொழுது தொடர முடியவில்லை பிறகு தொடரலாம் என்று பார்த்தால் நடிகர் விஜய் பல்வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் படம் தொடங்கப்படவில்லை..
இந்த நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி விஜய்க்கு சொன்ன கதையை நடிகர் அஜித்திடம் சொல்லி உள்ளார் அது அவருக்கு ரொம்ப பிடித்து போகவே தற்பொழுது ஏகே 62 திரைப்படமாக உருவாக இருக்கிறதாம்.. இதற்கான அதிகார பூர்வமான வெளிவரும் என சொல்லப்படுகிறது.
இதை கேள்விபட்ட ரசிகர்கள் ஒரு நல்ல கதையை விஜய் தவற விட்டுள்ளார் என கூறினார் இருப்பினும் விஜய் லோகேஷ் கனவராஜுடன் கைகோர்த்து லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படமும் மிரட்டும் என பலரும் கூறி வருகின்றனர்.